பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

ஆழ்வார்களின் ஆரா அமுது


வெய்யகதி ரோன்றன்னை விளக்கிட்டான் வாழியே! வேங்கடவன் திருமலையை விரும்புமவன் வாழியே! பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே! பொன்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே!89 என்று வாழ்த்தி மகிழ்கின்றது. நாமும் திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோனை வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றோம். பூதத்தாழ்வாரின் பரஞானம் : இந்த ஆழ்வாரும் கருவறை வாழ்க்கையின்போதே எம்பெருமானால் ஒரு காரணமுமின்றி கடாட்சிக்கப் பெற்றவர். ஆழ்வார் கூறுவார்: இன்றா அறிகின்றேன் அல்லேன் இருநிலத்தைச் சென்றங்(கு) அளந்த திருவடியை-அன்று கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எங்தை திறம். * |கருக்கோட்டியுள்-கருப்பத் தானத்துள்; இருநிலம். விசாலமான நிலம்; திறம்.தன்மை.1 என்று. எல்லாரும் பகவானை மறந்திருக்கும்படியான கருப்ப வாசத்திலும்கூட அடியேன் அவனை மறவாது வாழ்த்திக் கொண்டிருப்பவன்; ஆகவே அவனை நெடு நாளாக அறிந்தவன்; இன்று புதிதாக அறிந்தவன் அல்லேன்' என்கின்றார். இருகிலத்தைச் சென்று ஆங் களக்த திருவடிவை என்பது சிறப்பான பொருளை 62. அப்புள்ளை . வாழித் திருநாமம் - 1 63. இரண். திருவந். 87. திருக்கோட்டியூர் என்ற திவ்வியதேசம் திருப்பத்துர்-சிவகங்கை பேருந்து வ்ழியில் உள்ளது.