பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 135 கண்டேன்' -மறையாத சூரியனைக் கண்டேன்-என்பது பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானம். மற்ற அடிகளால் தான் அழகாகக் கண்டதைக் கூறுகின்றார். 'பரமபதத்தில் நித்திய சூரிகள் கண்டு கொண்டிருக்கும் திவ்விய மங்கள விக்கிரகத்தை உண்மையாகவே காணப் பெற்றேன்" என்கின்றார். இப்படிப்பட்ட பத்திநெறி பரமபதத்தைப் போலே இன்பமானதென்றும், நரகத்திற்குப் போகும் வழி நரகத்தைப் போலவே துன்பமயமானதென்றும் சொல்லு கின்றனர் வைணவப் பெருமக்கள். இறைவனை ஞானத் தால் நன்குனர்ந்து இதயத்தில் வைத்ததும், மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளான். " என்று பூதத்தாழ்வாரால் போற்றப்பெறும் பக்தவத்சலன் திருப்பதிகளிலெல்லாம் மேலான திருப்பதி அடியார்களின் இதயம்தான் என்று உகந்தருளுகின்றான். உள் புகுந்து நீங்கான் - அடியேனது உள்ளத்து அகம்' என்று நம்மாழ்வாரும் கூறினாரன்றோ? இந்த ஆழ்வாரும், -கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகக் கொண்ட இறை.' என்று கூறுவதைக் கண்டு மகிழலாம். இந்த இதயத்திற்கு அடுத்தபடியாக அவன் உகப்பவை திருப்பதி, திருப்பாற் கடல், வைகுந்தம், திருவரங்கம் முதலிய திருப்பதிகள். இந்த உண்மையை உணர்ந்து கொண்டதும், 75. இரண், திருவந். 28 76. பெரி, திருவந். 68 77. இரண், திருவந், 98