பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

ஆழ்வார்களின் ஆரா அமுது


கோல்தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால்தேடி ஓடும் மனம்..”* (கோல்-கொழுகொம்பு, கொழுந்து. (இங்கே) கொடி : என்று கூறுவர். இத்தகைய பக்தியே நாட்டு மக்களுக்குத் தவம் என்பது பூதத்தாழ்வாரின் கொள்கை. ஏத்திப் பணிந்து அவன்பேர் ஈரைஞ்துாறு எப்பொழுதும் சாற்றி யுரைத்தல் தவம்.”* என்று எம்பெருமானை வாயாரத் துதித்துத் தலையார வணங்கிப் பேராயிரமும் ஒதுவதே நமக்குத் தவம்’ என் கின்றார். உடம்பை வருத்திச் செய்யும் செயலால் அவனைக் காண முடியாது. உடம்பு நோவப் பண்ணின தபசால் காண அரிய சிரமகரமான வடிவையுடையவன் பகவான்’ என்பது வியாக்கியானம். எம்பெருமானுடைய நிர்ஹேதுக கிருபை யினால்தான் அவனை அடைய முடியும். இத்தகைய பக்தி நெறியே அவனை அடையும் எளிதான வழியென்றும் இந்த ஆழ்வார் கூறுவார். இக்கருத்தை பல பாசுரங்களில் எடுத்துக் காட்டி வற்புறுத்துவார். தாம் உளரே, தம்உள்ளம் உள்ளுளதே; தாமரையின் பூவுளதே, ஏத்தும் பொழுதுண்டே - வாமன் திருமருவு தாள்மருவு சென்னியரே! செவ்வே அருநரகம் சேர்வது அரிது!" 78. இரண். திருவந். 27 79. டிெ. 77 80. டிெ, 21