பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

ஆழ்வார்களின் ஆரா அமுது


என்று போற்றுவர். இங்கு பூதத்திருவடி என்பது பூதத்தாழ்வாரைக் குறிப்பது. மேலும் இந்த ஞானச் செல்வரை, அன்பேதகளி நூறும் அருளினான் வாழியே! ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே! கன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே! நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே! இன்டிருகு சிந்தைதிரி இட்டபிரான் வாழியே! எழில்ஞானச் சுடர்விளக்கை ஏற்றினான் வாழியே! பொன்புரையும் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே! பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே!" என்று வாழ்த்தி மகிழ்கின்றது. வைணவ உலகம். பேயாழ்வாரின் ய ர ம ப க் தி : பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய இரண்டு ஆழ்வார்களுடன் இருந்து எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுபவித்ததனால் பேயாழ்வாரிடம் அவனது இன்னருளால் பரமபக்தி தலை யெடுத்து வளர்கின்றது. எம்பெருமானுடைய அதுபவம் பெறாவிடில் நீரை விட்டுப் பிரிந்த மீன்போல் மூச்சு அடங்கும்படி இருத்தல் பரமபக்தி'யாகும் என்பதை முன்னரே விளக்கினேன்; இந்த நிலைக்கு எடுத்துக்காட்டு பேயாழ்வார் என்பதையும் சுட்டினேன். இதன் காரண மாக, கடலைக் கண்டவன் அதனுள் உண்டான முத்து மணி மாணிக்கம் முதலியவற்றைத் தனித்தனி கண்டு உகக்குமாப் போலே பெரிய பிராட்டியார், சங்கு, கெளத்துபம் முதலிய வற்றுக்கு இருப்பிடமாய் உறுப்பழகுகள் அலையெறிகின்ற பெரும்புறக் கடலாகிய எம்பெருமானை நேரில் கண்டு •இன்னது கண்டேன், இன்னது கண்டேன்’ என்று வகுத் துரைக்கின்றார். அந்த நேர்க்காட்சியினால் தமக்குண்டான ஞானச் சிறப்பினால் சொரூபம், உபாயம், புருஷார்த்தம் இவற்றிற்குரிய பொருட் சிறப்புகளையும் பன்னியுரைக் 86. அப்புள்ளை; வாழித்திருநாமம்-2.