பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

ஆழ்வார்களின் ஆரா அமுது


அதை அல்ல" என்று மறுப்போம், விளங்குகிறதா?’ என்று சவால் எழுப்பினான். சிறுவன் விளையாட்டாகச் சிரித்துக் கொண்டு, சாஸ்திரியாரே, உமது தாய் புத்திரவதி' என்றான். அடடா! என்னைப் பெற்றெடுத்த அன்னையை எப்படி மலடி என்று சித்தாந்தம் செய்வது?’ என்று சாஸ்திரி மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கும்போது, ஒ வித்துவ சிரோமணியே! இந்த அரசன் தர்மவான்' என்றான். "ஐயோ! இதை மறுப்பது அரச துரோக மல்லவா?’ என்று பண்டிதன் வில விலத்துப் போனான். அப்போது இடிமேல் இடி விழுந்தது போன்று விழுந்தது மூன்றாவது சொல். இந்த அரசனின் மனைவி பதிவிரதை', என்று. வாக்குவாதங்களால் படைப்பு, அளிப்பு அழிப்பு செய்து வந்த வித்துவானை வாயடைக்கச் செய்து :தர்க்கம் உண்மையைக் காண ஒரு கருவிதான்; உண்மையை மறைக்கும் குதர்க்கமாக்கக் கூடாது' என பாடம் படிப்பித்த சிறுவன்தான் பின்னாளில் ஆளவந்தார். என்று பேரும் புகழும் பெற்ற சிரீவைணவ ஆசாரியர் ஆனதாக வரலாறு. இங்குக் குறிப்பிட்ட கதையைப் போலத்தான் இறைவன் உண்மையையும் இன்மையையும் நிலை நாட்டுவதும். ஆனால் பக்தர்கள் இத்தகையது போன்ற வீணான விவகாரங்களில் தலையிடுவதில்லை. பே யாழ் வார் கூறுவார்: இறையாய், கிலனாகி, எண்திசையும் தானாய், மறையாய், மறைப்பொருளாய்; வானாய்-பிறைவாய்ந்த வெள்ளத் தருவி விளங்கொளிநீர் வேங்கடத்தான் உள்ளத்தின் உள்ளே உளன். : இறை.தலைவன்; மறை-வேதம்; பிறை.இளஞ் சந்திரன்.) என்று இப்படி இந்தச் சகத்திலுள்ள பொருள்களெல்லாம் தானேய்ாயிருக்கும் எம்பெருமான் திருமலையிலே வந்து 87. மூன்.திருவந்.39.