பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு #43 அந்நிதி கொண்டவன், அதன் பின்பு என்னுடைய இதயத்தில் நிலையாக வீற்றிருக்கின்றான்' என்கின்றார். இந்தப் பொருளையே பொருளாகவும், அமுதமாகவும் ஆருநரகம் தீர்க்கு மருந்தாகவும் விசுவாசம் கொள்கின்றது பேயாழ்வாரின் இதயம். நம்பிக்கை அதன் பின் நிலை யாகும்; விசுவாசம் பக்தியின் நிலையாகும். தெளிந்ததைக் கொண்டு தெளிதற்கு அரியதை நம்பி ஞானத்தை வளர்த்து, அநுபவ வழியாக அறியத்தக்க பொருளுக்குத் தர்க்கமாவது பகுத்தறிவாவது வழிகாட்ட முடியுமா? எனவே, இறைவனைக் காண்டற்கு இருளாத சிந்தை: வேண்டும் என்கின்றார். இருளாத சிந்தை என்பது என்ன? இராஜச, தாமத குணங்கள் கலசாமல் சுத்த சத்துவ குணம் மட்டும் நிறைந்திருக்கும் சிந்தையே இது: உய்த்துணர்வு என்னும் ஒளிகொள் விளக்கேற்றி வைத்(து) அவனை நாடி வலைப் படுத்தேன்" என்கின்றார். இருளிலே கிடக்கும் பொருளை விளக்கின் ஒளியைத் துணை கொண்டு கண்டுபிடிப்பதுபோல, இந்த இருள்தருமா ஞாலத்தில் ஒருவராலும் கண்டறிய முடியாத எம்பெருமானாகின்ற பரம்பொருளை ஞானமாகின்ற சிறந்த விளக்கின் - ஒளிகொள் விளக்கு - உதவியால் தேடிக் கண்டுபிடித்து நெஞ்சாகின்ற வலைக்குள் இருத்தி விட்டேன்' என்கின்றார். இந்தப் பாசுரத்தின் பிற்பகுதி யில் நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து' என்று அவனது மூன்று நிலைகளையும் குறிப்பிடுகின்றார். *ஊரகமும் பாடகமும் வெஃகாவும் பட்டபாடு என் நெஞ்சு படுகிறது என்கின்றார் போலும்! 88. மூன். திருவந். 19 89. Gög-94