பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

ஆழ்வார்களின் ஆரா அமுது


போது உள்ளம் தூய்மையாகின்றது. களங்கம் முற்றும் அகன்றால் பரமபதநாதன் பாம்பணையைவிட்டு வந்து பக்தன் உள்ளத்தில் பள்ளி கொண்டு விடுகின்றான். இங்ங்ணம் இறைவனிடம் அடிசேரப் பெறுபவர்கள், ஒழுக்கத்தில் நிலைத்து வாழும் வகை அறிந்தவர்கள் தவம், உடலை வருத்தும் செயல்கள் முதலானவற்றை விரும்பு வார்களா? இதனால்தான் ஆழ்வாரும், பொருப்பிடையே கின்றும் புனல்குளித்தும் ஐந்து நெருப்பிடையே கிற்கவும் நீர்வேண்டா?* (பொருப்பு.மலை; புனல்-நீர் நிலை; ஐந்து நெருப்பு. பஞ்சாக்கினி) என்று அறிவுறுத்துகின்றார். இதே பாசுரத்தில், வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்த்துசய் கைதொழுதால் அஃகாவே தீவினைகள் ஆய்ந்து. |வெஃகா . சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சந்நிதி, அஃகாவே-அகன்றோடிவிடும்) என்று தீவினைகள் ஒடும் போக்கையும் காட்டுகின்றார். இன்னொரு பாசுரத்தில் என்னுடைய கண்கள் திருவா பரணங்களாலும் திருமாலைகளாலும் அழகு பெற்றுள்ள எம்பெருமானின் பொன்மேனியைக் காண்பதற்கே பாரித் திருக்கின்றன. வாயோ அவனுடைய திவ்விய சரித்திரங் களைப் பாடுவதிலேயே ஊற்ற முற்றிருக்கின்றன; கைகளோ அவனுடைய திருவடிகளையே தொழக் காதல் கொண்டுள்ளன. என்கின்றார். இந்நிலையில் தவம் முதலான கரடுமுரடான காட்டுப்பாதைகளில் போய் 94. மூன்திருவந், 76. 95. டிெ.35.