பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பக்திசாரர்’ கேரியைச் சேர்ந்த பெருமக்களே, மாணாக்க மணிகளே, கரும்புத் தின்னக் கூலி கொடுப்பதுபோல் பல்கலைக் கழக மானிய ஆணையம், விரிவுச் சொற்பொழிவுத் திட்டம் ஒன்று ஏற்படுத்திப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த மண்டலத்தில் தம் அறிவைப் பொது மக்களிடமும் பரப்பவேண்டும் என்று பல்கலைக் கழகம் பணித்துள்ளது. அந்தத் திட்டத்தின்கீழ் திருவேங் கடவன் பல்கலைக் கழகம் நகரிக்கு என்னை அனுப்பி யுள்ளது. அத்திட்டத்தின்கீழ் உங்கள்முன் பேச வந்திருக் கின்றேன். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பள்ளித் தலைமையாசிரியர்க்கும் ஏனைய ஆசிரியர்கட்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். நான் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் கம்மாழ்வாரின் தத்துவம் என்ற பொருள் பற்றி என் பிஎச். டி. பட்டத் திற்காக ஆய்ந்து வருகின்றேன். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பது பன்னிரண்டு ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்களின் தொகுப்பு. இந்தப் பன்னிரு

  • திருவேங்கடவன் பல்கலைக்கழக விரிவுச் சொத் பொழிவுத் திட்டத்தில் 31.3.67.ல் நகரி கழக உயர்திண்லம் பள்ளியில் நிகழ்த்திய சொற்பொழிவு. -