பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் 157 கருதி தாம் பருகி மிச்சமான பாலை நீங்கள் பருகுங்கள்" என்று அவர்களிடம் திருப்பிக் கொடுக்கின்றார். தம்பதிகள் அதனைப் பருகிய அளவில் தம் கிழத்தனம் நீங்கி இளமைப் பருவ மடைகின்றனர். பின்பு அவ்வேளாண் மகள் கருப்ப முற்று ஒர் ஆண் குழந்தையைப் பெறுகின்றாள். பெற் றோர்கள் அக்குழந்தைக்குக் கணிகண்ணன்" என்று திருநாம மிட்டு வளர்த்து வருகின்றனர். ஒரு நாள் அக்குழந்தையை மழிசையாரின் திருமுன் கொண்டு வந்து விட, குழந்தையும் இவரது கடைக்கண் நோக்கினால் நன்கு வளர்ந்து நல்லறிவு பெற்று நூல்களைக் கற்று உணர்ந்து பகவத் பக்தியும் பாகவத பிரபத்தியும் உடையவனாக வளர்ந்து வரலா னான், மழிசையார் பல சமயங்களில் புகுதல் : இளமையில் பார்க்கவ குமாரர் பிரம்பறுப்பானிடத்திலே இருந்து கொண்டு கூடை முடைதல் முதலான குலத்தொழிலில் ஈடுபட்டிருக்கின்றார். தக்க வயது வந்ததும் திருத்தலப் பயணத்தை மேற்கொள்ளுகின்றார். எத்தனையோ நாடு களிலும் காடுகளிலும் சஞ்சாரம் செய்து ஒரு சித்தராகத் திரும்புகின்றார். எல்லாப் பொருளுக்கும் தலைமையான பரத்துவம் எது" என்பது பற்றி ஆராயத் தொடங்கு கின்றார். உலகாயதம், பெளத்தம், சமணம் முதலிய அவைதிக சமயங்களுள்ளும் மாயாவாதம், சைவம் முதலான சமயங்களுள்ளும் ஒவ்வொன்றிலும் தனித். தனியே புகுந்து ஆராய்கின்றார். ஒவ்வொரு சமயத் திற்குரிய சாத்திர நூல்களைக் கற்றுத் தெளிகின்றார்; பிறகு அவற்றிலுள்ள குறைபாடுகளைக் கண்டு புதிய சமயத் திற்கு மாறிக் கொண்டே வருகின்றார். பேயாழ்வாரின் தொடர்பு : இவ்வாறு பல காலம் பல சமயங்களையும் ஆய்ந்தவர் சைவ சமயத்தில் இறங்கு கின்றார். அதுவே சரியான சமயம் என்று துணிந்து சிவவாக்கியர் என்னும் பெயர் பூண்டு சிவபரமாகச் சில: நூல்களைச் செய்து கொண்டு பிற சமயத்தினருடன் கலந்து