பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

ஆழ்வார்களின் ஆரா அமுது


இறைவனை மனங்குளிர வாய்குளிரப் பாடிப் புகழ்ந்து பக்தி யோகத்தில் ஈடுபட்டிருக்கின்றார். அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணி, குரவமே கமழும் குளிர்மொழி லுண்டு குயிலொடு மயில்கள்கின்றால இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியா' (குரவம்.ஒருவகைப்பூ பொழில்-சோலை; ஆல-ஆட: இரவி.-சூர்யன்.) ஊராகத் திகழ்ந்தது. அந்தக் குளிர்ந்த சோலைகளும் பூக்களும் குயில்களும் மயில்களும் கடலும் மற்ற இயற்கை அழகுகளும் இறைவனுடைய அருளையும் அழகையும் நினைவூட்டி, சித்தி மார்க்கத்திலும் குயுக்தி மார்க்கத்திலும் ஒடிக் கொண்டிருக்கும் மனத்தைப் பகவானுடைய திருவடி களோடு பக்திக் கயிற்றால் கட்டி வைப்பதற்கு உதவியாக இருந்தன என்று கருதலாம். நாளடைவில் பாகவத. நெறியில் இவருக்கு இதயப் பசியும் ஆன்மதாபமும் தீர்ந்து விசுவாசமும் சாந்தியும் கை கூடுகின்றன. பக்தர்களின் பெருமையை அதிகப்படுத்துவதாக எண்ணி பல நிகழ்ச்சிகளைப் புனைந்துரைப்பதும் உண்டு. ஒரே நிகழ்ச்சி வெவ்வேறு விதமாகத் திரித்துக் கூறப்பெற்றிருப் பதினின்றும் இதனை அறிய முடிகின்றது. சில சமயம் ஒரு சமயத்தினர் பிறமதக் கடவுளை மதிப்புக் குறைத்தும் இழித்துக் கூறியும் உள்ளதைச் சில வரலாற்று நிகழ்ச்சி களால் அறிய முடிகின்றது. சமயக்காழ்ப்பின்றி திரிகரண சுத்தியாய் இவற்றைச் சிந்தித்தால் உண்மை தெளிவாகப் புலனாகும். ஆத்திகர்களே இத்தகைய கதைகளைக் கட்டி விட்டிருப்பதை நாம் காணும் போது வருந்தாமல் இருக்க முடியவில்லை. "பக்திசாரர்' என்ற திருநாமம் திருமழிசை பிரானுக்கு பூதத்தாழ்வார் வழங்கியதாக முன்னர்க் 7. பெரி. திரு. 2. 3: 7.