பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் #63 என்பான் ஒருவன் தன் சித்தினால் புலியொன்றினை அடக்கி அதையே தன் ஊர்தியாகக் கொண்டு அதன் மீதேறி ஆகாய வழியில் சென்று கொண்டிருக்கின்றான். இவரது யோக மகிமையினால் அவ்வூர்தி தடைப்பட்டு இவருக்கு நேரில் மேலே செல்ல மாட்டாது நின்று விடுகின்றது, இதற்குரிய காரணத்தை ஆராயும் போக்கில் எல்லாப் புறத்தும் நோக்குகையில் பூமியில் இருக்கும் யோகி இவன் கண்ணில் படுகின்றார். வியப்புற்று விண்ணினின்றும் இறங்கி இவர் சந்நிதானத்திற்கு வருகின்றான். இவரது ஆற்றலைச் சோதிக்கக் கருதி முனி புங்கவரே, நீவீர் உடுத்தியிருக்கும் கந்தையைக் கழற்றி எறிந்து, பீதாம்பரத்தாலாகிய இந்த உடையைப் பயன்படுத்திக் கொள்ளுவீர்" என்று: சிறந்ததோர் ஆடையை உண்டாக்கிக் கொடுக்கின்றான். ஆழ்வார் அதனைப் புறக்கணித்து தமது ஆற்றலால் மாணிக்க மயமான ஆடையொன்றைப் படைத்துக் காட்டு கின்றார். பகலவன் போல் ஒளிவிடுகின்ற அதனைக் கண்டு சித்தன் நாணுகின்றான். உடனே தன் கழுத்திலணிந்து கொண்டுள்ள மணிமாலையொன்றினை வாங்கி "இதனைச் செபமாலையாகத் தரித்துக் கொள்ளும்" என்று கொடுக்க வருகின்றான். ஆழ்வார் தமது கழுத்திலுள்ள துளசிமணி மாலையையும் தாமரை மணிமாலையையும் எடுத்துக் காட்டுகின்றார். அவையிரண்டும் சிறந்த நவரத்தின மாலைகளாய் விளங்கக் கண்டு மிகவும் நாணமுறுகின்றான். பெரியீர், சித்தர்கள் யாவரையும் வென்று வந்த அடியேனைத் தேவரீர் வென்றதனால் உம்மினும் சிறப்புடையதொரு சித்தர் உலகில் எங்கும் இலர்' என்று சொல்லித் துதித்து அவரை வலம் வந்து வணங்கித் தன் வழியே சென்று விடுகின்றான். கொங்கணசித்தன் வணங்குதல்: யோக நிட்டையில் இருந்து கொண்டிருக்கையில் கொங்கணசித்தன் என்பான் ஒருவன் இவரிடம் வருகின்றான். இவன் ஓர் இரசவாதி. இவன் பரபரப்போடு இவரிடம் வந்து இரும்பைப்