பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் #69 படுகின்றார். ஆழ்வாரும் கணிகண்ணனும் உடன்வர மீண்டும் திருவெஃகாவை அடைந்து அங்கு எழுந்தருள் கின்றார். தான் இங்ங்னம் செய்தது பின்புள்ளாருக்கும் தெரிய வேண்டும் என்று முன்போல வலத் திருக்கை கீழாக வன்றி இப்பொழுது இடத் திருக்கைக் கீழ்ப்படக் கண் வளர்ந் தருளுகின்றான். அரசனும் அன்ற முதல் ஆழ்வாருக்குத் தொண்டு பூண்டு தன் பிறவிப் பயனைப் பெறுகின்றான். இங்கனம் பக்தர் சொன்னபடி பரமன் செய்ததினால்' அப்பெருமானுக்கு யதோக்தகாரி" என்று வடமொழியிலும், *சொன்னவண்ணம் செய்த பெருமாள்' என்று அருந்தமிழிலும் தி ரு ந | ம ங் க ள் வழங்கலாயின. திருமழிசையாரும் திருமழிசையாழ்வார் என்று புகழ் பெறுகின்றார். இவர்கள் சென்று ஓர் இரவு தங்கியிருந்த ஊர் ஓரிரவிருக்கை எனப் பெயர் பெற்று வழங்கலாயிற்று. அப்பெயர் ஒரிக்கை என்று இன்று மருவி வழங்குகின்றது. பெருமாள் அன்பர் களின் தமிழுக்கு வசமாகிப் பின் சென்ற கதை தமிழகத்தின் இதயத்தையே கொள்ளை கொண்டு விடுகின்றது. தமிழ், வடமொழிகளோடு இந்துஸ்தான மொழியையும் கற்று வடஇந்தியாவிலுள்ள முகம்மதிய அரசரையும் வசமாக்கிக் கொண்டவரென்றும் முருகக் கடவுளின் சிறப்பான அருள் பெற்றவரென்றும் மதிக்கப்பெறும் குமரகுருபர அடிகளும், பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலே." (கொண்டல்.மேகம்.1 என்று பாடுகின்றார். இதனால் இந்தப் பெருமானின் உள்ளத்திலும் இந்தக் கதை ஊறிக் கிடந்திருக்க வேண்டும் என்பதை அறிகின்றோம். பெரும்புலியூர் நிகழ்ச்சி : தமது குருவாகிய பேயாழ் வாரும், பூதத்தாழ்வாரும் பலபடப் புகழ்ந்திருக்கும் 8. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்-காப்பு-1 9. மூன். திருவந். 30, 62 10. இரண். திருவந். 70, 97