பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் 171 யுடன் சுவாமி, உண்மையை வெளியிட்டருள வேண்டும்" என்று ஆழ்வார் திருவடிகளில் விண்ணபபம் செய்கின்றார். ஆழ்வாரும் தீட்சிதரின் வேண்டுகோளின்படி தமக்குள் அந்தர்யாமியாக விருக்கும் எம்பெருமானை நோக்கி, அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவ தென்கொலோ இக்குறும்பை கீக்கிஎன்னை ஈசனாக்க வல்லையேல் சக்கரங்கொள் கையனே! சடங்கர்வாய் அடங்கிட உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே! (சடங்கர் . வேதத்திற்குரிய ஆறு அங்கங்களையும் அறிந்தவர்; புறம் பொசிந்து . வெளிப்பட்டு) என்று விண்ணப்பிக்கின்றார். தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்வ ராதலால், எம்பெருமான் பாற்கடலோடும் அனந்த சயனத்தோடும் திருவாழி திருச்சங்குகளோடும் திருமகளும் நிலமகளும் திருவடி வருட தன் திருவுருவத்தை இவர்தம் திருமேனியில் தோற்றுவித்தானாம். அனைவரும் அந்தத் திவ்விய மங்கள விக்கிரகத்தைச் சேவித்து ஆழ்வார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தம் பிழை பொறுக்கும்படி வேண்டிக் கொண்டார்களாம், ஆழ்வாரும் அவர்கட்கு ஞானோபதேசம் செய்து அவர்களை வாழ்வித்தருள் கின்றார். திருக்குடந்தை வாசம்: பெரும்புலியூரைவிட்டு ஆழ்வார் திருக்குடந்தைக்கு எழுந்தருளுகின்றார். அங்கேயே நித்திய வாசம் .ெ ச ய்து பூரீவைணவப் பிரசாரம் செய்து வருகின்றார். திருமழிசையார் ஆழ்வார் நிலைக்கு உயர்ந்த 11. தனிப்பாடல்