பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 2}} திணைக்க வேண்டா. சேததர்க்குத் தம்மீது அன்பை உண்டாக்குமாறு எம்பெருமான் தான் பள்ளி கொள்ளுவதத் காகவே திக்குகளைப் படைத்துள்ளான் என்று இப் பாசுரத் திற்குச் சிறப்புப் பொருளும் உரைப்பர் வைணவப் பெரு மக்கள். நான்கு திக்குகளும் பெரியபெருமாளின் படுக்கையால் பயன் பெறுகின்றனவாம். மே ற் கு த் தி க்கு - தாம் விண்ணுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் த ைல ன் ம வகித்தலைத் தெரிவிக்குமாறு தான் சூடிய கிரீடத்தை (திருன்பிஷேகத்தை)யுடைய திருமுடியை வைப்பதனால் சிறப்படைகின்தது. கீழைத்திக்கு-எல்லா உலகங்களும் உய்யும்படி சரணமடைவதற்குரிய தனது திருவடிகளை நீட்டுவதனால் பெருமை அன்டகின்றது. வடக்குத்திக்குமுரட்டு சமஸ்கிருதம் நடையாடுவதாகி ஆழ்வார்கிளின் சேவிக்கினிய ஈரச்சொல் நடையாடாத தேசமாகையர்ல்ே அத்திக்கிலுள்ளாரும் ஈடேறுவதற்கு ஏற்பட வேண்டிய பின்னழகையெல்லாம் காட்டுவதனால் மேன்மை பெது கின்றது. த்ெற்குத்திக்கு -தனது அந்தரங்க பக்தன்ான் விபீடணாழ்வானுக்காகத் தனது திருக்கண்களை வைத்து அன்போடு நோக்குவதனால் சிறப்படைகின்றது. இங்ஙனம் நான்கு திக்குகளிலுள்ளாரும் பயன் பெற வேண்டும் என்று ஒரு காரணம் காட்டி எம்பெருமான் பள்ளிகொண்டதும் ஆழ்வார் பொருட்டாயிற்று என்ற கருத்து கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமாகண்டு" என்ற மூன்றாம் அடியில் தோன்றுவதைக் கண்டு மகிழலாம். 'எந்தை' என்ற சொல்லில் அழுத்தம் தந்து படித்து இப் பொருள் வருவதைக் கண்டு மகிழ வேண்டுகிறேன். நான்காம் அடியில், ஆற்றுப் பெருக்கிலே அருகிலுள்ள கரைகள் உடைந்தால் கரையைப் பாதுகாப்பவர்கள் கைவிட்டுக் கிடக்க நின்று கூப்பிடுமாப் போலே கூப்பிடுகின்றார். பெரிய பெருமாள் அழகைக் கண்டு குறியழியாது புறப்படுகின்ற சம்சாரிகளைப் பார்த்து உங்களைப் போலே உடில்