பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Zoš ஆழ்வார்களின் ஆரா அழுத்து அல்ன்ை; அரங்கன் கைங்கரியத்தில் ஊற்றம் மிக்க மகாவிரக் தன்; இவனை வசப்படுத்த நின்னாலாகாது" என்று மறுமொழி தருகின்றாள். வடிவழகில் இறுமாப்புடைய தேவதேவி இவனை என் வலைக்குள் சிக்கவைக்காமல் விடப்போவதில்லை' என்று உறுதி கூறுகின்றாள். திமக் கையோ நீ அவனை அங்ங்னம் செய்தால் நான் உன்க்கு ஆறு திங்கள் அடியவளாவேன்' என்று சூளுரைக்க, தங்கையும், நான் அவனை அங்ங்ணம் செய்யேனாயின், ஆறுமாத காலம் உனக்குத் தொழுத்தையாவேன்' என்று எதிர் சூளுரைக்கின்றாள். சம்ை கோக்கும் தேவதேவி: தேவதேவி அவரை தன் வசப்படுத்துவதற்குரிய தக்க சமயத்தை எதிர் ந்ோக்கியிருக் கின்றான். ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் என்ற வாய்மொழியை நன்கு அறிந்தவள் தேவதேவி. ஒரு நாள் அவள் தன் அணிகலன்கள் யாவற்றையும் சூழற்றிக் கொடுக்கின்றாள்; அவளையும் தோழியரோடு இல்லத்திற்கு அனுப்பி விடுகின்றாள். தான் மெல்லியதொரு செங்காவிச் சேலையை உடுத்திக்கொண்டு விப்ரநாராயணரிடம் வரு கின்றாள்; அவர் திருவடிகளில் விழுந்து வணங்குகின்றாள். நாராயணர், பெண்ணே நீ யார்? இங்கு வந்த காரணம் யாது?’ என்று கேட்கின்றார். அதற்கு அவள், அடியேன் முற்பிறப்பில் செய்த தீவினையால் விலை மாதாகப் பிறந்தேன். அடியேனை என் தாய் குலத்தொழிலை மேற் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றாள். நான் அதற்கு இசையாமல் அவளைத் துறந்து திருமாலடியாரான் தேவரீரது திருவடியைச் சரணமடைந்து உய்வுபெற நாடி வந்துள்ளேன். கருணைக் கடலான தேவரீர் அநாதையான அடியேனைக் காத்தருள வேண்டும். செடிகட்கு நீர் 5. குறள்-484 (காலனறிதல்}