பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோண்டதடித் தொடிகன் 235 வார்த்தல், மலர்கொய்தல், மாலை கட்டுதல், தேவரீர் இல்லாதபோது சோலையைப் பாதுகாத்தல் முதலிய பணிகளில் எதை நியமித்தாலும் செய்துவரக் காத்து இருக்கின்றேன்' என மிகப் பணிவோடும் வணக்கத் தோடும் விண்ணப்பம் செய்கின்றாள். விப்ரநாராயணரும் அவளுடைய கட்ட எண்ணத்தை உணராமல் அவளுடைய விருப்பத்திற்கு உடன்படுகின்றார். அவளும் தாம் இட்ட பணியைச் செய்து வருகின்றாள்; தாம் உண்டது போக மிகுந்த உணவை அவளுக்குக் கொடுத்து வருகின்றார். தேவதேவியும் அதனை உட்கொண்டு நந்தவனத்தில் பாத்தியமைத்தல், நீர்வார்த்தல் முதலிய குற்றேவல்களை மிகவும் ஊக்கத்துடன் செய்து கொண்டு தோட்டத்தைச் செழிப்புடன் வளர்த்து வருகின்றாள். தன்னிடத்தில் விப்ரநாராயணருக்கு மிகவும் நம்பிக்கையுண்டாகும்படி பணி செய்து வருகின்றாள். தேவதேவியின் வலையில் சிக்குதல்: இங்கனம் பல மாதங்கள் கழிகின்றன. ஒருநாள் பெருமழை பெய் கின்றது. அப்போது விப்ரநாராயணர் பர்ணசாலையுள் இருக்கின்றார். தேவதேவி வெளியில் மழையில் நனைத்து வருந்துதலைக் காண்கின்றார். அவள்பால் இரக்கங் கொண்டு உள்ளே வந்து நிற்குமாறு பணிக்கின்றார். அதுவே காரணமாகக் கொண்டு அவளும் அருகில் வந்து தனது தேன்மொழிகளாலும், மேனி மினுக்கினாலும் அந்தணரின் மனத்தைக் கவர்கின்றாள். அவரும் அவள் வலையில் சிக்கிக் கொள்ளுகின்றார். சில காலம் இவர்கள் இன்பமுடன் வாழ்கின்றனர். அந்தணரிடம் இருந்த செல்வம் யாவும் செலவழிந்து விடுகின்றது. தேவதேவியும் பொருளில்லாத அந்தணரைப் பொருள் செய்யாது கை விட்டுத் தன் இல்லத்திற்குப் போய் விடுகின்றாள். அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்." 6. குறள் - 911 (வரைவின் மகளிர்).