பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 299 கொண்ட இவ்வந்தணனுடைய வினையைக் கழித்தற் பொருட்டே, நாமே பொன்வட்டிலைக் கொண்டு போய்த் தந்து இவனைத் தண்டனைக் குள்ளாக்கினோம். உண்மையில் இவன் கள்வனல்லன். தூய்மையானவனே' என்று தெரிவிக்கின்றான். அரசன் துயிலுணர்ந்தெழுந் தவுடன் கனவின் விவரத்தை அமைச்சர் முதலியோருக்கு வியப்புடன் வெளியிடுகின்றான்; விப்ரநாராயணரையும் விடுதலை செய்து உபசரித்து அனுப்பி விடுகின்றான். நாராயணர் தூய்மை பெறுதல் பிறவியாகிய 'குஜ் சிறையினின்றும் விடுபடுவதற்கு ஒரு முற்குறியாகக் காவல் வீடு பெற்றார் விப்ரநாராயணர் என்றே நமக்குத் தோன்றுகின்றது. தண்டனையும் ஒரு முறையில் இறைவனின் திருவருளேயாகும் என்ற உண்மைக்கு இந்த அந்தணரின் சிறைத் தண்டனை ஒர் எடுத்துக்காட்டாக அமைகின்றது. விப்ரநாராயணரும் தாம் துளவத் தொண்டு துறந்து வைதிக ஒழுக்கத்தை மறந்து பொருட் பெண்டிர் பொய்மை முயக்கத்தில் ஆழ்ந்து கடை கெட்டவனாய் அலைந்து திரிந்ததை நினைந்து நினைந்து வேதனைப் படுகின்றார். மெய்எல்லாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டுப் பொய்எல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து கின்றேன்; ஜயனே! அரங்கனே!உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து கின்றேன்; பொய்யனேன். பொய்ய னேனே? (பொதிந்து . நிறைத்து; போழ்க்கன் . குறும்பன்) 9. திருமாலை . 33 # 4