பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 213 என்ற பாசுரத்தில், இவ்வாழ்வார் முதலில் தாம் இந்திரியன் களால் ஆட்கொள்ளப் பெற்றுப் பொன் வட்டில் நிமித்த மாகச் சிறைப்பட்டிருந்த சினத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டிருந்து சமயம் பார்த்து அவற்றைச் சிறைப் படுத்தினர் என்ற சிறப்புப் பொருள் உய்த்துணரத்தக்கது. (2) சூதனாய்க் கள்வனாகி (15), மெய்யெல்லாம் போகவிட்டு விரிகுழலாரில் பட்டு (33) என்ற பாசுரங்களை முன்னர் எடுத்துக் காட்டினேன். தேவதேவியின் வலையில் மாட்டின செய்தியும் பொன்வட்டில் நிமித்தமாகக் கள்வன் என்ற பட்டம் சூட்டப் பெற்ற செய்தியும் விளக்கப் பெற்றன. மெய்ப்பொருள் நூலார் இவற்றை ஒரு சீவான்மா பரமான்மாவிடம் முறையிடுவதாகக் கொள்வர். (3) இவர் எம்பெருமானுக்குத் துளவத் தொண்டு புரிந்து வந்த செய்தியை, துளவத்தொண் டாய தொல்சீர்த் தொண்ட ரடிப்பெர்டி சொல்* என்ற பர்சுரப் பகுதியால் அறிய முடிகின்றது. 'திருதி துழாய்த் தொண்டு புரிபவரும் இயற்கையான சேஷத் துவத்திலே நிலை நின்றவருமான தொண்டரடிப் பொடி யடிகள் அருளிச் செய்த திருமாலை என்னும் திருமொழி' என்று பொருள் படுவதைக் கண்டு மகிழல்ாம். மேலும் தாம் செய்த பாவங்கட்கெல்லாம் கழுவாயாக பாகவதர் களுடைய ரீபாத தீர்த்தத்தை உட்கொள்ளுவதே என்று பெரியோர்கள் அறவுரை கூறியதை இவர் வாழ்க்ன்க் வரலாறு கூறும்போது சுட்டிக்காட்டினேன். இந்தச் செய்தி, தொடையொத்தம் துளவமு கூடையும் பொலிந்து தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி என்னும் அடியேனை : 13. திருமாலை-45. 14. திருப்பள்ளி எழுச்சி.10