பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 217 பலதேவதைகள் உள என்பதற்கு மறுப்பு இல்லை. சரண மாகப் பற்றத்தக்க தெய்வம் வேறில்லை என்பதையே ஆழ்வார் உணர்த்துவது. கன்றினம் மேய்த்த எந்தை' என்பதால் எம்பெருமானது செளலப்பியத்தை வெளியிடு கின்றார் என்பது அறியத்தக்கது. (5) பத்தித்திறமும் ஞானமுமே சாதியைக் காட்டிலும் சிறந்ததென்பது இந்த ஆழ்வாரின் கொள்கையாக இருந்தது என்பதை இரண்டு பாசுரங்களால் அறிய முடிகின்றது. பழுதிலா ஒழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள் இழிகுலத் தவர்களேனும் எம்மடி யார்க ளாகில் தொழுமினிர் கொடுமின் கொண்மின் என்றுகின் னோடு மொக்க வழிபட அருளி னாய்போல் மதிள்திரு வரங்கத் தானே." :பழுது . குற்றம்; ஒழுகல் ஆறு - பரம்பரையில்; சதுப் பேதி மார்கள். சதுர் வேதிகள்; இழிகுலம் . தாழ்ந்த குலம்; ஒக்க சமமாக; வழிபட ஆராதிக்கும்படி: இப்பாசுரம் பிறப்பாலும், அநுட்டானத்தாலும் குறை வில்லாத சதுர்வேதிகளை நோக்கி எம்பெருமான் கூறியது: "நான்முகன் முதல் உங்கள் அளவும் நீண்டு வருகின்ற பரம்பரையில் ஒரு குற்றமும் அற்றவர்களாய் நான்கு வேதங்களையும் ஒதினவர்களே! நமக்கு அடிமைப் பட்டவர்களாக இருந்தால், அவர்கள் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களேயாகினும் நீங்கள் அவர்களைத் தொழுங்கள்; உங்களிடத்துள்ள சிறப்பான பொருள்களை அவர்கட்கு உபதேசியுங்கள்; அப்படிப்பட்ட சிறப்புப் பொருள்கள் 19. திருமாலை . 42