பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

ஆழ்வார்களின் ஆரா அமுது


திருவடி விளக்கின தண்ணிர் ஒப்பற்ற தீர்த்தம், அவன் அமுது செய்த சேடம் மிக்க தூய்மையுடையது என்று சொல்லுகையாலே, அலங்காரமான மதுவையுண்டு அதனாலே உன்மத்தரான தூய்மை இல்லாதவரும், இந்தத் தீர்த்தம் உண்ட உணவின் சேடம் இவற்றின் சம்பந்தத் தாலே தூய தன்மையராம்படி பாவந் தீர்த்தப் பிரசாத னாம் என்று அருளிச் செய்த பகவானுடைய வார்த்தையான திருமுருகப் பாசுரத்தையும், அதன் எடுப்பான, வானுளார் அறிய லாகன் வானவா! என்ப ராகில் தேனுலாம் துளய மாலைச் சென்னியாய் என்ப ராகில் ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க னேலும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே |வான் - மேலுலகம்; வானவா - தேவனே, தேன் உலாம். தேன் பெருகா நின்ற; ஊனம் ஆயினகள் . இழிந்த செயல்கள்; போனகம் . அமுது: சேடம் . மிகுந்தது) என்ற ஆழ்வார் திருப்பாசுரத்தையும் அறிவார்க்கிறே 'ஜன்ம உத்கர்ஷ் அநுகர்ஷங்கள் தெரிவது 99 மேலும், இந்த ஆழ்வார் கூறுவதையும் நெஞ்சில் நிறுத்தவேண்டும். அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கும் ஓதித் 21. திருமாலை . 41 22. சாதியும் ஆசிரமமும் ஞான்மும் ஒழுக்கமும் தள்ளத்தக்கவை என்கை.