பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 22#. தமரர்களில் தலைவ.ராய சாதியங் தணர்க ளேனும் நூமர்களைப் பழிப்பு ராகில் கொடிப்பதோ ரளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு னானே' tஅமர நெஞ்சில் பதியும்படி, ஓதி - படிந்து; தமர் . பாகவதர், துமர் - அடியார்கள்; பழித்தல் . கீழாகப் பேசுதல்; புலையர் . சண்டாளர்) என்பது பாசுரம். இதன் கருத்து : நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள் இவற்றையெல்லாம் மனப்பாடம் பண்ணி, அவற்றின் பொருள்களையும் அறிந்து, அவ் வறிவுக்குப் பலனாக பகவத் கைங்கரியத்தில் முதன்மையாக ஊன்றியிருக்கும் சிறந்த அந்தணர்களாயிருந்த போதிலும் அவர்கள் இந்த யோக்கியதைகள் எல்லாம் இல்லாமல் கேவலம் பகவத் கைங்கரியம் ஒன்று மாத்திரமுடைய ஒரு பூரீவைணவரை (-அதாவது சண்டாள சாதியில் பிறந்த வரை) அந்தப் பிறவியைப் பற்றி இகழ்வாக நினைத்து நிந்தனை செய்வார்களானால் அங்ஙனம் நிந்திப்பவர்கள் தாங்கள் பிராமணியம் கெட்டுக் கர்ம சண்டாளர்களாய்ப் போவார்கள். இப்படிப் போவது பிறப்பின் முடிவிலோ என்னில் அன்று நிந்தித்த அந்தக் கணத்திலே சண்டாளரா யொழிவர்.' (6) பல பாசுரங்களில்' அரங்கனையே விளித்துப் பாடுவதனால் அரங்கனையே குலதெய்வம்-தாம் தொழும் தெய்வம் - என்று கொண்டமை தெளிவாகின்றது. 23. திருமாலை - 43 24. பாசுரம்- 1, 2, 3, 6, 8, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 26, 30, 31, 32, 33, 36, 37, 38, 39, 40, 42, 43 - என்பவை காண்க.