பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

ஆழ்வார்களின் ஆரா அமுது


வேறுபட்ட ஆன்மாவின் சுவாதந்திரிய புத்தி முதலிய வற்றை அடியோடு ஒழித்து என்றவாறு. இதற்குமேல் ஆன்ம சொரூபத்தை உள்ளபடி உணர வேண்டும். அதாவது ஆன்மா சுயப் பிரகாசன், நித்தியன், உணர்வைக் குணமாகவுடையவன், அணு அளவினன், அநந்யார்ஹ சேஷபூதன்', அந்த சேஷத்துவத்தைப் பாகவதரளவும் உடையவன் என்று இங்ங்ணம் விரிவாக உணர்தல். பிரகிருதி பிராக்கிருதங்கள் தாழ்வானவை, கீழானவை என்றறிந்து ஆன்மாவையும் உள்ளபடி அறிந்த பிறகு பின்னையும் ஆம்பரிசு அறிந்து கொள்ளுகையாவது கைங்கரியமே புருஷார்த்தம்-அடிமைத்தொழிலே ஆன்மா அடையவேண்டிய பொருள்-என்று அறிதலாகும். ஐம்புலனகத் தடக்குகையாவது, எம்பெருமானுக்குப் புரியும் கைங்கரியத்தில் சொந்தப் பயன் பிறவாதபடி நோக்குதல். தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே. (திருவாய்: 2.9:4) என்று நம்மாழ்வார் கூறியபடி எம்பெருமானுக்கே இனிதாகப் பண்ணும் கைங்கரியமே புருஷார்த்தம் என்ற நுண்பொருள் ஈண்டு உணரத் தக்கது. காம்பு அறத் தலைசிரைத்து என்பது, இறைவனை அடையும் வழிகளில் தனக்குள்ள பற்று அறும்படி தன் தலையிலுண்டான துரிதங்களைப் போக்கி. அதாவது பேற்றுக்கு எம்பெருமான் சாதனமேயொழிய நாம் செய்யும் கிரியையால் லாபங்களொன்றும் சாதனமல்ல என்ற உறுதியான நம்பிக்கை கொண்டு என்றபடி, தான் என்னும் மூலமான வழிகளை விடுதலைச் சொன்னவாறு. வாழும் சோம்பர் என்றது.கெடுஞ்சோம்பரை விலக்கு இன்றதைக் குறிப்பிடுகின்றது. கெடுஞ் சோம்பராவார் 29. அநந்யார்ஹ சேஷபூதன் . பிறர்க்கு அடிமை யாகாது எம்பெருமான் ஒருவனுக்கே அடிமையாக இருப்பவன்.