பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

ஆழ்வார்களின் ஆரா அமுது


தன்னையும் அறியாமல் அவர்பால் இரக்கம் உண்டாயிற்று. அவரிடம் அவர் வழி தப்பிப் போவதைச் சுட்டிக் காட்டினான். அவரும் அதனை உணர்வாராயினர், பொறுக்க முடியாததாக விடாயுடன் அவர் ஒரு தடாகத்தை நாடிச் செல்லுகையில் அருகே ஓர் அழகிய பொய்கையைக் கண்ணுற்றார்; தாபமிகுதியால் தவறி அக்குளத்தில் விழுந்திட்டார். அப்போது அருகிலிருந்த கத்திரபந்து தன் கையிலிருந்த வில்லையும் அம்பையும் எறிந்துவிட்டு, அம் மாமுனிவரை நீரினின்றும் அகற்றித் தாமரைக் கிழங்கு களை உணவாக நல்கி அவரது விடாயைப் போக்கி அவரை மகிழ்வித்தான். முனிவர் அக்குளக் கரையின் மீதிருந்த ஒருமரத்து நிழலில் அமர்ந்து இளைப்பாறினார். கத்திரபந்தும் அவரது கால்களைப் பிடித்து அமுக்கி நோவு தீர உபசாரங்களைப் புரிந்தான். முனிவர் அவருடைய வரலாற்றைக் கேட்க, அவனும் தான் சூரியன் மரபில் விச்வதரன் என்பவருக்கு மகனாய் பிறந்தவன் என்று தொடங்கித் தன்னுடைய பாவச் செயல்களை ஒன்றுவிடாமல் அவரிடம் உரைப் பானாயினன். இவற்றைச் செவியுற்ற முனிவரும் அவனை நல்வழிப்படுத்த எண்ணி அவனுடைய தீச் செயல்களை விட்டொழித்து அருயிர்களிடம் அன்பு காட்டுமாறு: பணித்தார். இவனும் தான் தீய குணங்கட்குப் பிறப்பிட மானவன் என்றும், தன் மனம் தன் வசப்பட்டதல்ல என்றும், இது தவிர வேறு நியமனம் பணிக்கப் பெற்றால் அதனைச் சிரமேற் கொள்ளக் காத்திருப்பதாகவும் கூறினான். எப்படியாவது இவனை உய்விக்கப் பேரவாக் கொண்ட முனிவரும் எப்போதும் கோவிந்த, கோவிந்த என்று சொல்லிக் கொண்டிருந்தால் அஃது அவனுக்கு நன்மையைப் பயக்கும் என்று உரைத்துப் போயினர். அ. து மு. த லா க க் கத்திரபந்துவும் அத்திருநாமத்தை இடைவிடாது சொல்லிக் கொண்டு தன் காலத்தைப் போக்கினன். சில ஆண்டுகள் கழித்து அவன் காலகதி: