பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

ஆழ்வார்களின் ஆரா அமுது


முத்கலன் 32 : முத்கலன் என்பான் பெரும்பாவிகளின் தலைவன். அவன் ஒருநாள் கோதானம் செய்யும்போது *கிருஷ்ணாய என்று சொல்லித் தானம் செய்தான். பின்னர் அவன் காலகதி அடைந்தபோது யமதூதர்கள் வந்து நெருங்கி அவனை யமனிடம் கொண்டு சென்றனர். யமன் இவனை எதிர்கொண்டு மரியாதை செய்வானா உனேன். முத்கலன் யமனிடம் தன்னைப் பாராட்டுவதன் காரணத்தை வினவ, யமனும் கிருஷ்ணன் நாமத்தை ஒரு. தடவை சொன்னதை நினைவூட்டினான். யமனுக்கும் முத்கலனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் நரக வாசிகளின் காதில் விழுந்தது. உடனே நரகமும் துக்காது பவமாயிருந்த நிலைமாறி ஆனந்தாதுபவ நிலமாகி விட்டது. யமன் கிருஷ்ணன் என்ற திருநாமத்தைத் தனக்கு நன்மை செய்யும் என்று கருதி உச்சரிக்கவில்லை; முத்கலன் வேண்டுகோட்கிணங்கி உபதேசிக்கவும் இல்லை; நரகவாசிகளின் காதில் இது விழுந்து அவர்கள் உய்வு பெற வேண்டும் என்று நினைத்தும் சொல்லவில்லை. இதனைக் கேட்டவர்களும் பாவம் செய்வதற்குக் கவன்று அதற்குக் கழுவாயாகச் செய்து கொள்ளக்கூடிய காலத்திலும் கேட்க, வில்லை. பாவத்தின் பலன்களை அநுபவிக்கும்போது கேட்டனர். அப்போதும் விருப்பத்துடன் கேட்டார்கள் அல்லர்; எதிர்பாராதவிதமாகவே அத்திரு நாமம் அவர்கள் செவியில் பட்டது. இப்படிப்பட்ட திருநாமம் இவ்வளவு பெருமையுடையது என்பது இவன் வரலாற்றால் தெளிவுறுத்தப் பெற்றது. இந்த இதிகாசம், கமனும்முற் கலனும் பேச நரகில்கின் றார்கள் கேட்க கரகமே சுவர்க்க மாகும் நாமங்கள் உடையன் நம்பி; 32. இவன் வரலாறு விஷ்ணுதர்மத்தில் 96 ஆவது அத்தியாயத்தில் கூறப்பெற்றுள்ளது.