பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. குலசேகரப் பெருமாள்" கல்கத்தாவில் வாழும் தமிழ்ப் பெருமக்களே, பாரதி தமிழ்ச் சங்கச் சான்றோர்களே, வணக்கம், கீழ்த்திசை மாநாட்டுக்கு (வெள்ளி விழா மாநாடு) வந்த அடியேனைச் சங்கத்துச் சான்றோர்கள் பேசுமாறு அழைத்தமைக்கு மிக்க நன்றி, என் பிஎச். டி. பட்டத்திற்கெனக் கடந்த ஆறாண்டுகளாக நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தில் ஆழங்கால் பட்டு வரும் அடியேன் உங்கள் முன் குலசேகரப் பெருமாள் என்ற தலைப்பில் பேச முன் வந்துள்ளேன். பெருமாள்” என்ற பெயர் முருகனுக்கும் நாராயணனுக்கும் வழங்கும் பெயராகும், இராமபிரா னையும் பெருமாள் என வழங்கும் வைணவ மரபு உண்டு. இராமபக்தியில் தலைசிறந்து விளங்கும் குலசேகராழ்வார் குலசேகரப் பெருமாள் என்று வழங்கப் பெறுகின்றார்.

  • கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தில் 30.10.1969 இல் ஆற்றிய சொற்பொழிவு: அழைப்பு அச்சிட நேரம் இன்றி. திடீரென்று அமைக்கப் பெறும் கூட்டத்தைப் பற்றிய செய்தியை ஆங்கில நாளிதழில் தெரிவித்து விட்டால் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் கூடி விடுவதை இங்கு நான் நேரில் கண்டு வியந்தேன். இந்த அவசரக் கூட்டத்தில் டாக்டர் மு. வ. தாயுமானவர் பற்றியும், அடியேன் குலசேகரப் பெருமாள் பற்றியும், டாக்டர் S. சங்கரராஜூ, நாயுடு திருவள்ளுவர் பற்றியும் பேசினோம்,