பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV அர்ச்சாவதாரம் (ர்வசன பூஷணம்.42) என்ற வாக்கியத்தைச் சிந்திக்கின்றோம் (பக். 99.) இந்த மேற்கோள்கள் யாவும் தக்க இடங்களில் எடுத்துக் காட்டியிருப்பது ஆசிரியரின் வைணவப் பெரு நூல்களின் பயிற்சியைக் காட்டுகின்றது. டு. வைணவ சமயக் கருத்துகள்: வைணவ சம்பந்த மான சம்பிரதாய, சாத்திர, தோத்திர நூல்களை ஆழ்ந்து கற்றவர்கள்தாம் இலக்கியங்களில் ஆங்காங்கு ஒளி விட்டுத் திகழ்ந்து கொண்டிருக்கும் சமய சம்பிரதாயக் கருத்துகளை தெளிவாக எடுத்துக்காட்ட இயலும். அப்பெரும்பணியைச் செய்துள்ளார் பேராசிரியர் இந்த நூலில், சில காட்டுகள்: (1) அர்த்த பஞ்சகம்’ என்பது என்ன? இதனை ஈண்டு விளக்குவேன்... திடமாயுள்ள பகவத, பாகவதப சாரங்கள் பொறுக்க முடியாத அபசாரங்களாகும்’ (பக். 21, 22). (2) பேற்றுக்கு எம்பெருமான் சாதனமே யொழிய நாம் செய்யும் கிரியையால் லாபங்க ளொன்றும் சாதனமல்ல" (பக். 226). (3) இதனால் பரமான்மா சீவான்மாவுக்கு நன்மை செய்வதிலே ஊன்றியிருப்பதும், சீவான்மா பரமான்மாவிடம் நம்பிக்கை கொள்ள வேண்டியிருப்பதும் தெளிவா கின்றன (பக். 280). (4) 'சீவான்மா பரமான்மாவை விட்டு விலகிப் போக முடியாத நிலையையும் பின்னது முன்னதற்கு ஆதாரமாயிருக்கும் நிலையையும் உணர் கின்றோம்" (பக். 281). (5) சிவான்மா பரமான் மாவின் உடைமை (பக். 285). சு. பொதுக் கருத்துகள்: எந்தச் சமயக் கருத்துகள் அந்தச் சமயத்திற்கு அப்பாற்பட்டவராய் வாழ்கின்ற மக்களுக்கும் பொருத்தமாக..ஏற்றுக் கொள்பவையாக. அமைகின்றனவோ அவைதாம் உயர்ந்த மக்கட் சமுதாயத் திற்குரியவையாகும். அத்தகைய பொதுவான கருத்துகளை