பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 239 இதனால் இராமாயணக் காலட்சேபத்தையே எப்போதும் தமது போதுபோக்காக மேற்கொண்டு வந்தார் சேர வேந்தர். தமது திருமாளிகைத் திருவாராதனத்தில் எழுந் தருளியுள்ள இராமனுக்கும் இராசகோபாலனுக்கும் தித்திய நைமித்திக உற்சவங்களைக் குறைவறச் செய்துகொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் இராமா யணக் காலட்சேபங்களைக் கேட்டு அநுபவித்துக் கொண்டு இருக்கையில் எதிர்பாராமல் இரண்டு திடீர் திகழ்ச்சிகளை உண்டாக்கி விட்டார். முதல் நிகழ்ச்சி: இராமாயணக் காலட்சேபம் நடை பெறுகின்றது. கரன்வதைப் படல நிகழ்ச்சி அன்றைய காலட்சேபத் தலைப்பு. குலசேகராழ்வார் மிக உன்னிப்பாக கதையைக் கேட்டுக் கொண்டு தன்னை மறந்தநிலை. இலக்குவனால் ஏற்ற நெடுங்கொடி மூக்கும் இருகாதும் முலை இரண்டும் இழந்த சூர்ப்பனகை, காற்றினிலும் கனலினினும் கடியானைக் கொடியானைக் கரனை உங்கள் கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம் கொண்டு போனாள்.' |சலம் கொண்டு-தணியாத முற்றின வைரங்கொண்டு.) இவளுக்குக் காவலாக இருந்த கரன், துரடணன் பெருஞ் சேனையுடன் இராம லக்குமணர்களை நோக்கிப் புறப்படு கின்றனர். இராமன் தம்பியைப் பிராட்டிக்குக் காவலாக இருக்கும்படி நியமித்துத் தன்னந்தனியனாகப் போருக்குச் செல்லுகின்றான். அரக்கர்கள் வீ ர | வ ச த த் து - ன் இராமனைச் சூழ்கின்றனர் என்பதைக் கம்ப நாடன், எற்று வரம்பிடித் தேந்துதும் என்குகள் பற்று வாநெடும் பாசத்தில் என்குநர் 8. கம்ப. ஆரணிய, கரன்வதை, 143.