பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குேைசகரப் பெருமான் 24% பெறாத பாவியானேனே ஐயோ கெடுவேன், கெடுவேன்' {2) என்று புலம்புகின்றாள். ஒர் இல்லத்தில் மக்கட்பேறு ஏற்பட்டதென்றால் உறவினரெல்லாரும் வரிசையாக வந்து குழந்தையை எடுத்துத் தம் துடைமீது வைத்துக் கொண்டு எத்தையே என் குலவிளக்கே முகிற்கூட்ட அழகைக் கவர்ந்து கொண்ட காளையே! என்று இப்படிப் பலவாறாகப் புகழ்ந்து கூறுவர். பின்னர் என் செல்லமே! நுந்திை யார்? காட்டு பார்ப்போம் என்று கேட்கும்போது குழந்தை தன் விரலாலும் கடைக்கண்ணாலும் தன் தந்தையைக் காட்டுவது வழக்கம். இவ்வாறு கண்ணனாகிய குழந்தை யைக் கேட்கும்போது, பெற்றெடுத்த வசுதேவனைக் காட்டவேண்டியது பிராப்தமாக இருக்கவும் பிறந்தது முதலாக நந்தகோபர் மாளிகையிலே வளர்ந்தது பற்றி அந்த நந்தகோபரை யன்றி வேறொருவரைத் தந்தை என்று அறியாமையால் அவரையே தனக்குத் தந்தையாகக் காட்டியது அடுக்கும். இவ்வாறு எண்ணிய தேவகி, இந்தன் பெற்றனன் கல்வினையில்லா கங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே (3) என்கின்றாள். அந்தோ! பரம பாக்கியசாலியான யசோதையைக் கைபிடித்த காரணத்தாலே இவன் என் தமப்பன்’ என்று விரலாலும் கண்ணாலும் காட்டும் படியான அதிருஷ்டத்தை நந்தகோபன் பெற்றான்; பெரும் பாவியான என்னைக் கைபிடித்த கொடுமையாலே வசுதேவன் இழந்தான்' என்று சொல்லி வயிறு எரிகின்ற தைக் காண்கின்றோம். குழந்தை நிலையில் மழலை இன்பத்தை இழந்த தந்தையைப் பற்றி மேலே பேசினாள். இப்போது சந்து வளர்ந்த நிலையில் பெறும் இன்பத்தைத் தான் இழந்தது பற்றிப் பேசி கழிவிரக்கம் கொள்ளுகின்றாள். கண்ணா!