பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

ஆழ்வார்களின் ஆரா அமுது


ஆனந்தத்தை விளைவிக்கும் முழுமதியத்தை யொத்த திருமுகமும், திண்ணிதான திருக்கையும், திருமார்பும், திருத்தோளும், திருக்குழலும், திருநெற்றியும், திருக் கண் களுமாகிய இவ்வுறுப்புகளின் சோபையால் விளங்கா நின்றுள்ள உன் வளர்ந்த பருவத்தின் அழகை இப்போது நான் கண்ணாரக் கண்டு அதுபவியா நின்றாலும், தாய் ஒருத்தியையே யன்றி வேறு ஒருவரையும் அறியாத இளம் பருவத்தை அநுபவிக்கப் பெறாமல் போனேனே! என் கின்ற அநுதாபமே என நெஞ்சைக் கொள்ளை கொண் டிருப்பதனால் இப்போது அநுபவிக்கப் பெற்றது ஒரு பொருளாகத் தோன்றாமல் கழிவிரக்கமே என்னைப் புண்படுத்தா நின்றது” , (4) என்கின்றாள். இத்துடன் நின்றாளா? மேலும் பேசுகின்றாள். என் அருமை மகனே, உன் திருநெற்றியில் பொருந்தியிருக்கும் சுட்டி' என்ற ஆபரணம் அசையும்படி நீ முத்தம் தருவதை யும் இழந்தேன்; நம் குழந்தையின் முகம் திருத் தந்தையின் முகம் போலவே உள்ளது" என்று சொல்விக் கொண்டு நின்திருமுக எழிலை மகிழ்ச்சி பொங்கப் பார்த்து நிற்கும் போது, நீ நின் சிவந்த சிறிய திருவாயில் விரல்களை வைத்துக் கொண்டு சிறுபாறென்று பேசும் நிலை தோற்றச் சொல்லும் மழலைச் சொற்களையும், திருவி லேன் ஒன்றும் பெற்றிலேன்; எல்லாம் தெய்வ கங்கை யசோதைபெற் றாளே (5) என்று வயிறு பிடிக்கின்றாள். இவற்றை இழப்பதற்குப் பாவியாகிய நான் ஒருத்தி ஏற்பட்டாற் போல், அநுபவிப் பதற்குத் தெய்வ மாது' என்று சொல்வதற்குத் தகுதியான யசோதைப் பிராட்டி ஏற்பட்டாள்; உன் லீலா ரஸங்கள் எல்லாவற்றையும் அவளே பெற்றனள்' என்கின்றாள். யசோதை ஒருவித நோன்பும் நோற்காமல் எதிர்பாராமல் (யாத்ருச்சிகமாகவே) கண்ணபிரானுடைய அதிமானுஷ் சில விருத்த வேஷங்களத்தனையும் காணப் பெற்றமை,