பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். சில இாட்டுகள்: (1) அரங்கன், என் அமுதினைக் கண்ட கண்கள்:இந்த அடியில் வருவது 'அமுதா, அமுதனா என்பதில் ஐயப்பாடு. இதனைத் தெளிவுபடுத்துகின்றார் இந்: நூலாசிரியர். உப்புச் சாறாய் எட்டா நிலத்தில் இருக்கும் தேவர்களின் அமுதம் போலன்றிப் பரமப் மதுரமாய் பரம சுலபமாயிருக்கும் நான் கண்ட அமுதம் என்பார் என் அமுதினை என்கின்றார். சிலர் அமுதனை என்று ஒதுவது சுவையற்றது. ஆழ்வாருக்குப் பெரிய பெருமாள் அமுதத்தை யொத், திருத்தல் கருத்தேயல்லது அமுதனாகவே இருத்தல்" கருத்தன்று. திருமங்கையாழ்வாரும், 6 அளப்பரிய" ஆர்முதை அரங்கம் மேய அந்தணனை (திருநெடுந். 14) என்று போற்றுவது கண்டு மகிழத் தக்கது (பக்.74). அமுதன் அல்லது அமுது என்ற மேற்கோள் காட்டித் தெளிவுபடுத்தியிருப்பது நூலாசிரியரின் மதி: நுட்பம் நூலோடு இயைந்த ஒன்று என்பதை வாசகர்கட்குத் தெளிவாகின்றது. (2) அற்றமே ஒன்ற றியீர், அவனல்லால் தெய்வம் இல்லை' (திருமாலை.9): -இதில் அற்றம்' — மறைபொருள்; உட்கருத்து. *அவன் அல்லால் தெய்வம் இல்லை" என்பதால் தேவதாந்தரங்கள் இல்லை என்று மறுக்கின்றார் அல்லர் ஆழ்வார். எம்பெருமானுக்குச் சரீரமாகப் பல தேவதைகள் உள என்பதற்கு மறுப்பு இல்லை. சரணமாகப் பற்றத்தக்க தெய்வம் வேறில்லை என் பதையே ஆழ்வார் உணர்த்துவது (பக் 216-17). இத் தெளிவிற்குப் பிறகு இப்பாசுரம் எச்சமயத்தினர் உள்ளத்தையும் புண்படுத்தாதிருப்பதைக் காணலாம். நிறைவாக: இந்நூலின் மூலமாக, ஆழ்வார்கள் வழிபட்ட ஆராஅமுதை மனதாரக் கண்டு தரிசிக்கலாம்;