பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

ஆழ்வார்களின் ஆரா அமுது


நிரந்தரமாக வாழ்ந்து தமது அறுபத்தேழாவது வயதில் பரமபதிக்கின்றார்! அர்ச்சாவதார ஈடுபாடு: இவர் எம்பெருமான்களை அநுபவிக்கும்போது அவ்வதுபவத்தாலாகிய ஆனந்தம் உள்ளடங்காமல் அதனைப் பாசுரங்களாக வெளியே கழிய விடுவார். இவ்வாறு வெளிப்பட்ட பாசுரங்கள் 105. இவை பத்துப் பதிகங்களாகத் தொகுக்கப்பெற்று அவை நாலா யிரத் திவ்வியப் பிரபந்தம் முதலாயிரத்தில் ஆண்டாள் பிரபந்தங்களை அடுத்து பெருமாள் திருமொழி என்ற திருநாமம் பெற்று இடம்பெற்றுள்ளது. இவர் ஈடுபட்ட திருத்தலங்கள்: திருவரங்கம், திருவேங்கடம், திருவித்துவக் கோடு என்பவை. இவைபற்றிய திருமொழிகளில் ஆழங் கால் படுவோம். திருவரங்கம் : பெருமாள் திருமொழியில் மூன்று திருமொழிகள் (1, 2, 3) திருவரங்கம் பற்றியவை. திரு அரங்கம் என்கினற பெரிய நகரில் இருகாவிரிகளின் நடுவில் இருள் சிதறி யொழியும்படி ஒளிவிடும் மணிகள் திகழும் நெற்றியையும் சிறந்த புள்ளியையும் அழகாக உடைய ஆயிரம் படங்களையும் கொண்ட அரவரசப் பெருஞ்சோதி திருவனந்தாழ்வான் வெண்ணிறமான திருப்படுக்கையாக உள்ளான் (1). இந்த அனந்தாழ்வான் தன்னுடைய ஆயிரம் வாய்களாலும் ஆயிரநாமங்களைச் சொல்லி எம்பெருமானைத் துதித்தவண்ணம் உள்ளான். இவன் ஆயிரம் வாய்களும் அழலை கக்கிக் கொண்டிருப்பதனால் அதன் தீக்கொழுந்து தலைகளின் மேல் கிளம்பி சண்பகம் முதலிய செம்மலர்களால் அமைந்த ஒரு மேற்கட்டிபோல் விளங்குகின்றது. இந்த எம்பெருமான் வெற்றிச்செயல்கள் சொல்லி முடியா. குதிரை வடிவாய் வந்த கேசி என்னும் வாயைக் கீண்டு மகிழ்ந்தவன்; கண்ணனாய் அவதரித்த காலத்தில் இந்திரன் பொழிந்த கல்மாரியை கோவர்த்தன மலையைக் குடை யாகப் பிடித்து ஆநிரைகளைக் காப்பாற்றியவன்.