பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 267 வாயால் சொல்வி வாய் விட்டுப் பாடிக் கொண்டு அன்பு மிகுதியால் கண்களினின்று காவிரி நதி போல் பரவசமாகப் பெருகுகின்ற அரங்க நகர் அப்பன் சந்நிதித் திரு முற்றத் தைச் சேறாக்குகின்ற பாகவதர்களின் திருவடிகளால் துகையுண்ட சேற்றை எனது தலைக்கு அலங்காரமாகக் கொள்வேன்" என்கின்றார் (3). அடுத்துப் பேசுவது: : எத்திறம்! உடலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே! என்று நம்மாழ்வார் ஆறுமாதம் மோகித்துக் கிடக்கும்படி மயக்கவல்ல கண்ணி துண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய தீரச் செயலை' அநுசந்தித்து, கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன்...... அண்டர் கோன் அணி அரங்கன் 24 என்றவாறு அரங்கநகர் அப்பனைக் கண்ணனாகப் பாவித்து அவனுக்கு ஆட்பட்டுப் பணி செய்து நாக்குத் தடிக்கும்படி நாராயணா' என்று கூவி உடல் காய்ப்பேறும்படி சேவித்துத் தோத்திரம் பண்ணி ஆனந்தம் அடைகின்ற அடியார்களின் திருவடிகளை என் மனம் துதித்து அவர்கட்கே பல்லாண்டு பாடும்" (4)என்று கூறுவது நம் உள்ளத்தை நெகிழ்விக்கின்றது.

  • அடியார்களை ஆட்கொள்வதற்காகவே கோபத்தை வெளியிடும் பாங்கில் குரலை எழுப்பும் ஏழு காளைகளின் எருத்தங்களை முறித்தவனும், போர்செய்ய வந்த காளியனை அடக்கியவனும், கல் மதில்களால் சூழப்பட்ட தென்னரங்கத்தில் வி ல் .ே லா டு எழுந்தருளியிருக்கும் காளமேகம் தம் போன்றவன் மனத்தில் நிலைத்து விளங்கப் பெற்ற பக்தியினால் மயிர்க்கூச்செறியும் வைணவர்களையே என் நெஞ்சம் அநுசந்தித்து மயிர்க்கூச்செறியும்' (5) என்று பேசி மகிழ்கின்றார்.

22. திருவாய்.1 . 3 : 1. 23. கண்ணிநுண்.1. 24. அமலனாதி.10.