பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 畿5实 என்பது தொட்டுணர்தல் என்று பொருள்படும். நறுத் துழாய் மாலை உற்ற என்பதில் மாலை" என்பது "பூமாலை' என்று பொருள்படுகின்றது. மாலை உற்று எழுந்து" என்பதில் மாலை" என்பது மயக்கம் (வியா மோகம்) என்று பொருள்படுகின்றது. திருப்பாற் கடலில் பள்ளி கொள்பவனும், நறுத்தேன் மிக்க செவ்வித்திருத் துழாய் மாலை அணிந்தவனைப் போன்ற பெரிய மார்பை யுடையவனும், தாமரைக் கண்ணனுமாக இருப்பவன் அரங்கநாதன். அவன் மீது மண்டியெழும் வியாமோகத்தை புடையவர்கள் அடியார்கள்; இந்தக் காதலால் எழுகின் நார்கள்; கூத்தாடுகின்றார்கள். வாயார அவன் புகழ் பாடு கின்றார்கள். திருத்தலங்கள் தோறும் பித்தேறித் திரிகின் நார்கள். இத் தொண்டர்களின் வாழ்வுக்கு என்மனம் மயங்கிக் கிடக்கின்றது (8) என்று கூறுகின்றார் ஆழ்வார். அடியார்கள் திறத்தில் பித்தேறிய ஆழ்வார் அவர்களை மேலும் உயர்த்திப் பேசுகின்றார், அடியார்களின் திருக் கண்களில் கண்ணிர் தாரை தாரையாகப் பொழிகின்றது. உடலில் மயிர் சிலிர்க்கின்றது; நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய் நிலைதளர்கின்றது. இந்நிலையில் எம்பெருமானுக்கு அடியவர்களாய் அவன் திறத்தைப் பாடி நின்றவிடத்து நில்லாமல் பலவித ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்குகின்றனர். இங்கனம் பித்தேறித் திரிகின்றவர்கள் பைத்தியக்காரர்கள் அல்லர்; இங்ங்ணம் பக்தி இல்லாத மற்றவர்கள் யாவரும் பைத்தியக்காரர்கள் (9) என் கின்றார். மூன்றாவது திருமொழியில்: சம்சாரிகள் பக்கல் வெறுப் புண்டாகி அவர்களைக் காண்பதும் அவர்களுடன் நட்புக் கொள்வதுமான சகிக்க முடியாத நிலைமை தமக்குண் டானதைத் தெரிவிக்கின்றார்.

  • நிலையற்ற இவ் வாழ்க்கையை உண்மையானது எனக் கொள்ளும் இவ்வுலகத்தவரோடு இனி நான்