பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

ஆழ்வார்களின் ஆரா அமுது


அப்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரனாய் எளிதாய், உள்ளே புகும்பேற்றைப் பெறக்கடவேன்' என்று தன் விருப்பத்தை வெளியிடுகின்றார். மீன் நீர் நிலையைப் பற்றியே உயிர்தரிக்க வேண்டிவருமே என்று ஒரு கைங்கரிய பரனாகப் பிறக்கவேண்டும் என்பது இவருடைய விருப்பம் என்பது தெரிகின்றது (3).

  • இயங்கு திணையைச் சேர்ந்த ஒரு பிறப்பு வேண்டுவ: தில்லை; திருவேங்கடமலையில் நிலைத் திணையை சேர்ந்த ஒரு மரமாகவேனும் ஆனால் போதும் என்று விரும்பு கின்றார். வானவர் கோனொடும் சிந்து பூ மகிழும் திருவேங்கடம்" என்றபடி பரமபதத்திலுள்ள மலர் மார் பொழியும் இடமாதல் பற்றித் திருமலை புஷ்ப மண்டபம்" எனப்படுகின்றது. திருமலையில் மலர்ப்பணி செய்வது சிறப்பாதலால் அப்பணிக்குப் பயன்படும் மரமாதலை வேண்டுகின்றார். பலவகை மலர்களுள் எம்பெருமான் திருவுள்ளத்திற்கு மிகவும் உகப்பானது சண்பகமலர். தேனில் இனியபிரானே! செண்பகப் பூச்சூட்டவாராய்! " என்று பெரியாழ்வார் கூறுவதனால் இதனை அறியலாம். வட்டில் கைங்கரியம் கிடைத்தால் வட்டிலைக் களவு: செய்யும் ஆசை தோன்றிச் சிறையில் தள்ளப்பட நேரிடும்.28 எனக் கருதி சண்பகமாகப் பிறக்கவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தாராம் (4).

இதனை அடுத்து ஆழ்வார் விரும்புவது புதராய்ப் பிறத்தல். தம்பகமாய் பிறக்கும் தவமுடையனாவேனே." என்பது காண்க. செண்பகமாய்ப் பிறந்தால் திருமலைக்கு. 23. பெரியாழ், திரு. 2. 1:1 28. இன்று திருமலையில் உண்டியில் விழும் தொகை డిఫ;q#శ్రీ கணக்கிடுபவர்களும் நகைகளை மதிப்பிடுவோரும் இத்தகைய கிசைக்குட்பட்டு அந்த ஆசையை நிறை வேற்றும்பொழுது பிடிபடும் செய்திகள் வருவதை நினைக் கின்றோம்.