பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரைப் பற்றி, , , 70-அகவையை எ ட் டு ம் இந்த நூலாசிரியர் பி.எஸ்.சி., எல்.டி. வித்துவான், பி.ஏ., எம்.ஏ., பிஎச்.டி., பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளி யில் தலைமையாசிரியராகவும் (1941-1950), பத்து ஆண்டு கள் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் த மி ழ் ப் பேராசிரியராகவும் (1950-60), பதினேழு ஆண்டு - - கள் திருவேங்கடவன் பல்கலைக் பிறப்பு: 27 - 8 - 1916 கழகத்தில் தமிழ்த்துறைத் தலை - வராகவும் பேராசிரியராகவும் (1960-77) பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1978-இல் சென்னை யில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 பிப்பிரவரி-1979 ஜூன்) கலைக் களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணி யாற்றியவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பிஎச்.டி.) பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளி யிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றன; பெற்றும் வருகின்றன. தவிர ஆசிரியம் (5), இலக்கியம் (11), சமயம் (20), திறனாய்வு, (11) அறிவியல் (14), ஆராய்ச்சி (4), வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு (18) - என்று 78 நூல்களின் ஆசிரியர். இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும், சமய நூல்களில் மூன்றும், திறனாய்வு நூல்களில் ஒன்றும் தமிழக அரசு பரிசுகளும் அறிவியல் நூல்களில் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசும், ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசும்-ஆக எட்டு நூல்கள் பரிசுகள் பெற்றவை. இனிமை, எளிமை, தெளிவு இவர்தம் நூல் களின் தனிச்சிறப்புகளாகும். - wrapper Pinted at Eskay Art Pinters, Madras-5 Phone: 844727.