பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

ஆழ்வார்களின் ஆரா அமுது


வாழகில்லேன்' என்று மாநுட நாற்றத்தைப் பொறுக் காதவள். அன்றிப்பின், மற்றொருவர்க்கென்னை பேச லொட்டேன் மாலிருஞ்சோலை மாயர்க்கல்லால்" என்று தாம் ஆண்டவனுக்கு வாழ்க்கைப்படுவதாக உறுதி பூண்டவள். இங்ஙனம் மணத்துடன் முளைக்கும் திருத் துழாய் போல் எம்பெருமான் திறத்து ஆராதகாதலுடன் அவதரித்தவள். ஞானத்துடன் பிறந்த இந்தப் பூங்கொடி தான் உறுதி பூண்டவண்ணமே திருவரங்கச் செல்வனையே கொள்கொம்பாகப் பற்றிப் படர்ந்து அப்பெருமானுடன் நிலைத்து வாழ்பவள். குழந்தைப் பருவத்திலேயே ஞானம் கைவரப் பெற்றவளாதலால் மணவாள மாமுனிகள் இவளைப் பிஞ்சாய்ப் பழுத்தாளை என்று புகழ்ந் துரைப்பர். இவள் பிறப்பு: இப்பெருமாட்டியின் பிறப்பு விநோத மானது, சீதாப்பிராட்டியாரின் பிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். சனகன் யாகபூமியை ஏற்படுத் துவதற்காக நிலத்தை உழும்போது கொழுமுனையில் அகப் பட்டதாகப் பேசுவர். இதனைக் கம்பநாடன், உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி மொழிகின்ற புவிமடக்தை உருவெளிப்பட் டெனப்புணரி எழுகின்ற தெள்ளமுதோ(டு) எழுந்தவளும் இழிந்தொதுங்கித் தொழுகின்ற கன்னிலத்துப் பெண்ணரசி தோன்றினாள்: (கதிர் . சூரியன்; புவிமடந்தை - பூமிதேவி: உரு . திரு வுருவம்; புணரி. கடல், இழிந்து . தாழ்வடைந்து.1 நாச். திரு. 1:5 பெரியாழ். திரு. 3.4:5 உ, ர. மா. 24 பால. கார்முகம். 17