பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/46

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஞானப் பூங்கொடி

3

என்று காட்டுவன். இவளை சீதேவியின் அம்சமாகக் கொள்வர். இது போலவே சிரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் திருத்துழாய் பாத்தியமைத்தற் பொருட்டுக் களைக்கொட்டு கொண்டு திருநந்தவனத்தைக் கொத்து கையில் கொத்தின் நிலத்தடியில் சீதேவி — பூதேவியின் அம்சமாக ஒரு பெண் மகவு கிடைத்தது. கிடைத்த நாள் ஆடி மாதம்: பூர நட்சத்திரம்.

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்காண்டாள் அவதரித்தாள்
[1]

என்ற மணவாள மாமுனிகளின் திருவாக்கால் இஃது அறியப்படுகின்றது.

மக்கள் செல்வம் வாய்க்கப் பெறாத பெரியாழ்வாருக்கு இஃது “இறைவன் கொடுத்த செல்வமாகத்” தோன்றியது. இச் செல்வத்தை அவன் பெயரால் வளர்ப்பது தன் கடமை என்று கருதினார். குழந்தையும் கையுமாக இல்லத்திற்கு ஏகினார். அவர் தேவிகளான விரஜை அவரை எதிர் கொண்டு வந்து உள்ளம் உருகி, திருக்கோயிலிலிருந்து அவர் கொண்டுவரும் பிரசாதத்தைப் பெற்றுக் கொள் வதைப்போல் இரண்டு கைகளாலும் பயபக்தியுடன் வாங்கிக் கொண்டாள். குழந்தையை அணைத்துக் கொண்டே போய்த் தொட்டிலில் இட்டாள். ஆழ்வார் அந்தக் குழந்தை கிடைத்த விதத்தைச் சொல்லச் சொல்ல அவளுடைய பக்தியும் அதிசயமும் அதிகரித்தன. அந்தத் தெய்விகக் குழந்தையின் அழகை அள்ளி அள்ளிப்பருகினாள். “பிள்ளைக் கலிதீர இந்தப் பெண் கனியைப் பெருமாளே நமக்கு அளித்து விட்டார்” என்று எண்ணி அக்குழந்தையை நோக்க நோக்க அவள் உள்ளத்தில் உவகை புதிது புதிதாக ஊறிக் கொண்டிருந்தது. பெரியாழ்வாரும். நாம் உய்யும்பொருட்டே இந்தக் குழந்தையை எம்பெரு

  1. 2. ர. மா. 22