பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 5. கோதையும் சின்னஞ்சிறு குடமொன்றை ஒக்கவில் இடுக்கிக் கொண்டு தண்ணிர் எடுத்து வந்து துளசிச் செடிகட்கு ஊற்றுவாள். பெரியாழ்வார் தாம் தொடுத்த மாலைகளைச் சிறப் பான பக்தி விநயத்துடன் சிரீவில்லிபுத்துரரில் எழுந்தருளி யிருக்கும் ஆலிலைப் பள்ளியானுக்குச் (வடபத்திர சாயிக்கு) சாத்தி வருவதைக் கண்டுவரும் கோதைக்கும் அதைப் பார்த்துப் பார்த்து நாளடைவில் பக்தியும் விநயமும் பெருகி வந்தன. தன் தந்தையும் பல்வேறு அடியார்களும் பஜனை செய்வதையும், உருக்கமான பக்திப் பாடல்கள் பாடுவதை யும் அவற்றிற்கேற்ப ஆனந்தக் கூத்தாடுவதையும் குழந்தைப் பருவம் முதற்கொண்டே பார்த்துக் கொன் டிருந்ததால் கோதையின் விளையாட்டு, விருப்பம், இலட்சியம் எல்லாம் பக்திமயமாகவே இருந்தன. இவளும் அவர்களுடன் பஜனை முதலிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாள். அழகின் கொழுந்தாகவும் அன்பின் கொழுந் தாகவும் வளர்ந்த கோதை பக்தியின் கொழுந்தாகவும் விளங்குவது கண்டு பெருமகிழ்ச்சி கொண்டார் பெரி யாழ்வார். கோதைக்கு ஆழ்வாரே கல்வி கற்றுத் தந்தார். அவளும் அழகிலும் பக்தியிலும் ஞானத்திலும் ஒருங்கே வளர்ந்து வருவது கண்டு ஆழ்வார் பூரித்துப்போனார். நாளடைவில் பெரியர் வளர்த்த செல்வி அக்காலத்திலுள்ள கலை களெல்லாம் நிரம்பப் பெற்று ஒப்பற்ற ஞானசுந்தரியாகஞானப் பூங்கொடியாக-கோல்தேடி ஓடும் கொழுந்தாக' -விளங்கினாள். பெரியாழ்வாரைப்போல் இவளுக்கும் கவிதை பாடும் ஆற்றல் இருந்தது; கற்பனைக் கண்ணும் வாய்க்கப் பெற்ற வளாக இருந்தாள். இந்த அருமைச் செல்வியின் ஞான 7. இரண். திருவந்: 27