பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

ஆழ்வார்களின் ஆரா அமுது


என்று கருதினார்கள். இதனால் அவர்களுக்கு ஆழ்வாரிடம் உள்ள பக்தியும் மற்றும் விசுவாசமும் அதிகரித்தன. உண்மையில் கோதையின் அன்பு மனந்தான் அப்படி அந்தத் தெய்வமாலை கட்கு மணமும் பொலிவும் ஊட்டியது. என்பது அவர்கட்கு எப்படித் தெரியும்? அஃது. ஆழ்வாருக்குக் கூடத் தெரியவில்லையே! ஒருநாள் இவளது செய்கையைத் தந்தையார் பார்த்து விட்டார். அவளோ தன்னை மறந்த நிலையில் இருந்த மையால் சில நிமிடங்கள் அவரைக் கவனித்தாளிலள். ஆழ்வாரும் ஒன்றும் தோன்றாதவராய்ச் சிறிது நேரம் வானாஇருந்தார். அவள் அப்படிச் செய்வாள் என்று அவர் கனவிலும் கருதவில்லை. அவளோ அவன் அழகிற்கு நாம் ஒத்தவளாகுமோ? காதலன் நம்மை அங்கீகரிப்பானோ?” என்ற பகற்கனவுகளில் தன்னை முழுக்க முழுக்க மறந்திருந் தாள். என்ன அபசாரம்?’ என்று பதறினார் ஆழ்வார். அவர் உள்ளம் திடுக்கிட்டு நடுங்கியது. அருமை மகள் முன் சென்று தழுதழுத்த குரலில், அம்மா, குழந்தாய்! இங்ங்னம் செய்ய உனக்கு மனம் எப்படித் துணிந்ததோ? எத்தகைய குற்றம் செய்து விட்டாய்! பகவானுக்குத் தொண்டு செய்வதென்றால் எவ்வளவு பயபக்தியுடன் செய்ய வேண்டும்!" என்றுச் சற்றுக் கடிந்து கொண்டார். மீண்டும் நந்தவனம் சென்று பூக்களைக் கொய்தார். அவரது திருவுள்ளம் தம் அருமை மகள் செய்த அபசாரத் தையே எண்ணிக் கொண்டிருந்தது. விரைவில் பூக்களுடன் வீடு வந்து சேர்ந்து மகளை உற்சாகப் படுத்திக் கொண்டே மாலைகள் தொடுத்தார். கோதையும் ஒன்றும் பேசாமல் தந்தைக்கு உதவி செய்த வண்ணம் இருந்தாள். எனவே: அவர், இனி இவள் திருந்தி விடுவாள்; பிழையை உணர்ந்து விட்டாள்!" என்று கருதினார். பெரியாழ்வாரும் ஆலிலைப் பள்ளியானின் சந்நிதிக்குச் சென்று வழக்கம் போல் மாலைகளை அருச்சகரிடம் தர, அவரும் அவற்றை வாங்கிப்