பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 21 கொண்டிருத்தல் பற்றிய ஞானம் உண்டாகும். ஆன்மா அடையும் பயன் தர்மம், அர்த்தம், காமம், ஆன்மா நுபவம், பகவததுபவம் என்ற ஐந்துவகைப் பொருள்களை விவரமாக அறிதலாகும். இப்பயனை அடையும் வழி களாக கர்மம், ஞானம், பக்தி, பிரபத்தி, ஆசாரிய அபிமானம் என்பவை பற்றிய விவரங்களைத் தெளிவாக அறிதலாகும். இப்பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவையும் ஐந்தாகும். இவற்றுள் ஆன்ம விரோதி என்பது தேகமே ஆன்மா என்ற மனமயக்கமும் எம்பெருமானை யொழிந்தவர்கள் பக்கல் சேஷம் என்றிருக்கையும், தானே சுதந்திரன் என்றிருக்கையும் ஆகும். பரத்துவ விரோதி என்பது, பிறதெய்வத்தைப் பரம் என்றும், எம்பெருமா ஆணுக்குச் சமம் என்றும், திருமாலினது அவதாரங்கள் வெறும் மானிடத் தன்மையன என்றும், அர்ச்சைகளுக்குப் பயன்களைப் பயக்கும் சக்தி இல்லையென்றும் எண்ணு: தலாகும். புருஷார்த்த விரோதி என்பது, பகவத் கைங்கரி யங்களை விட வேறு புருஷார்த்தங்களில் விருப்பமும், தனக்கு விருப்பமான பகவத் கைங்கரியத்தில் இச்சையும் ஆகும். உபாய விரோதி என்பது, ஏனைய உபாயங்கள் சிறப்புற்றன என்ற எண்ணமும், சித்தோபாயம் சிறு முயற்சியால் சாதிக்கத்தக்கதா யிருத்தலாலும், உபேயம் அரிய முயற்சியால் சாதிக்க யுக்தமாக இருத்தலாலும், இடையூறுகள் பலவகையாக இருத்தலாலும் உண்டாகும் ஐயங்களாலாகும். பிராப்ய விரோதி என்பது, இப்பிறப்பிற்கு ஏதுவாகிய பிராரப்த கர்மமாக வந்த சரீரத்துடன் சம்பந்தமும், அதுதாபலேசமும் இல்லாததாய், பெருத்த தாய், திடமாயுமுள்ள பகவதபசார பாகவதபசார பொறுக்க முடியாத அபசாரங்களாகும். இனி, திருப்பாவையில் இந்த அர்த்த பஞ்சகப் பொருள் கள் அமைந்திருப்பதைக் காட்டுவேன். இறைவன் இயல்பு: இஃது ஒன்று முதல் ஐந்து பாசுரங் களில் புலனாகின்றது. முதல், பாசுரத்தில் கார்மேனிச்