பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

ஆழ்வார்களின் ஆரா அமுது

' செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன்" என்பதால் பரத்துவமும், இரண்டாவது பாசுரத்தில் ‘பாற்கடலில் பையத்துயின்ற பரமன்' என்பதால் வியூகமும், மூன்றாவது பாசுரத்தில், ஒங்கி உலகளந்த உத்தமன்" என்பதால் விபவமும், நான்காவது பாசுரத்தில் ஆழிமழைக் கண்ணன், ஊழி முதல்வன், பாழியந்தோளுடைப் பற்ப நாடன்” முதலியவற்றால் மீண்டும் பரத்துவமும், இரண்டாவது பாசுரத்தில் பகவானை மனதில் பாவித்துக் கொண்டிருக்கும் (அந்தர்யாமித்துவமும்) பாவைக்கு. (அர்ச்சை) செய்யும் கிரிசைகள் என்பவற்றால் ஏனைய இரண்டும் தெரிவிக்கப் படுகின்றன. இன்னும் ஐந்தாவது: பாசுரத்தில், மாக னைமன்னு வடமதுாை மைந்தனை து பெருர்ே யமுனைத் துறைவனை ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரனை என்ற பகுதியால் மீண்டும் விபவமும் காட்டப் பெறு: கின்றது. இவற்றில் ஐந்துதிருமேனிகள் காட்டப் பெற்ற தால் ஈசுவர சொரூபம்’ விளக்கமாயிற்று. ஆன்மசொரூபம்: ஆறு முதல் பதினைந்து பாடல்களில் இது விளக்கம் அடைகின்றது. இவற்றுள் பகவானை மறந்து, அவனையடைவதற்குச் செய்ய வேண்டிய முயற்சி களையும் மறந்து கிடக்கும் ஆன்மசொரூபமும், சீவர்கள் மாயையினால் பிரகிருதி நிஷ்டையில் உறங்கிக் கிடப்பதால் உபாய விரோதி சொரூபமும் தெரிவிக்கப் பெறுகின்றன. :புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?” (6) சுேகீ சென்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? ..." காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாசநறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால், ஒசைப் படுத்த தயிரர வம் கேட்டிலையோ? (7), கோது நலமுடைய பாவாய்