பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 29. நாச்சியார் திருமொழியில் உபாயமும் இல்லாமல் போகாது. இரண்டிலும் மிகுதியான பகுதியைக் கொண்டே இங்ஙனம் வரையறுத்துக் கூறப் பெற்றது என்பதை அறிதல் வேண்டும். திருப்பாவையில் உன்றன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம் (28) என்றும் எற்றைக்கும் ஏழிேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே யாம ஆட் செய்வோம் (29) என்றும் இவ்வளவு பிரபத்தி ஆண்டாளுக்குப் பிறந்த போதிலும், இவளுடைய முறுகிய காதலுக்கேற்ப கண்ண பிரான் வந்து கலவி செய்து நிற்கக் காணாமையாலே, பிரிவைத் தரித்திருக்கமாட்டாமல் பிரிந்திருப்பவர்களைக் கூட்டிவிடவல்ல காமனை நோக்கி இரக்கின்றாள்; வழிபடு கின்றாள். திருவேங்கடமுடையானுக்கு என்னைக் கைங்கரி யம் பண்ணும்படி கற்பிக்கவேண்டும்? (1) என்றும் புள்ளின் வாய்க்கீண்டானிடம் நான் சென்று சேரும்படி நீ என்னை சேர்ப்பிக்கவேண்டும் (2) என்றும், திருவேங்கமுடையான் என்கின்ற விளக்கினிலே நான் சேரும்படி நீ என்னைச் செய்யவேண்டும் (3) என்றெல்லாம் வேண்டுகின்றாள் முத்தாய்ப்பாக, வானிடை வாழும்.அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் திரிவதோர் கரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப ஊனிடை ஆழிசங்(கு) உத்தமற்கென்(று) உன்னித்(து) எழுந்தஎன் தடமுலைகள் மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன் கண்டாய் மன்மதனே (வானவர் . தேவர்கள்; வேள்வி - யாகம்; வகுத்த . கொடுத்த; அவி - அவிசு; ஊனிடை . மேனியில்; உத்தமன் - புருடோத்தமன் உன்னித்து - ஆதர வுடன்1