பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ஞானப் பூங்கொடி 3} முன்னம், என்ற அடுத்த திருமொழியை (மூன்றாவது திருமொழி) நோக்குமிடத்து பிரிவில் தலைக் கட்டினபடி தோற்றும். இந்த இரண்டாவது திருமொழி காமஸ்மாச் ரயணத்தை (காமனைப் பற்றுதலை) அதுகாரமாக நடப்பதுபோல இது வேறொரு அதுசார வகையால் {:சிற்றில் சிதைத்தல்' என்ற வகையால்) செல்லுகின்றது என்பதை நாம் அறிதல் வேண்டும். இதில் ஐந்து பாசுரங்கள் ( . 4, 7) எங்கள் சிற்றில் சிதையேலே” என்று இறுகின்றன. கண்ணபிரான் இரவின் முற்கூற்றில் பெண்களோடே புணர்ந்து கிடந்து பிற்கூற்றில் உறங்குபவனாதலால், கதிரவன் உதயமாகும் அளவும் கண்விழியான் என்று நினைத்து ஆய்ச்சிமார்கள் அவன் அறியாததொரு பொய்கைக்குப் பணி நீராட வருகின்றனர். கண்ணன் இருளன்ன மாமேனியனாதலால் அவர்கள் நிழலைப் பற்றிக் கொண்டு போய் அவர்கட்கு முன்னே பொய்கைக் கரை போய்ச் சேர்கின்றான். ஆய்ச்சியர்கள் அவன் வந்ததை அறியவில்லை. இடைப் பெண்களாகையாலே ஆடைகளை யும் அணிகளையும் களைந்து கரையில் வைத்துவிட்டு நீரில் மூழ்குகின்றனர். இந்நிலையில் மாயக்கண்ணன் அவற்றை யெல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு மிக விரைந்து குருந்த மரத்தின் மேலேறி மறைந்து நிற்கின்றான் - இந்த நிகழ்ச்சியை அநுகரித்து ஆண்டாள் பாடுவதாக மூன்றாம் திருமொழி அமைகின்றது. துகிலைப் பணித்தருளாயே!, குருந்திடைக் கூறை பணியாய்", பட்டைப் பணிந் தருளாயே", கூறை தாராய்' எ ன் று பாசுரங்கள் இறுகின்றன. இதில் ஒரு பாசுரத்தைக் காட்டுவேன். கோழி அழைப்பதன் முன்னம் குடைந்துரோடுவான் போந்தோம்; ஆழியஞ் செல்வன் எழுந்தான்; அரவணைமேல் பள்ளி கொண்டாய்!