பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

ஆழ்வார்களின் ஆரா அமுது


விருந்தாவனத்துக் கொப்பாகவும், திருக்கண்ணபுரத்தை திருவாய்ப்பாடிக்கு ஒப்பாகவும் நிர்வகிக்கலாம். நகர வாசத்தோடு வனவாசத்தோடு வேற்றுமை தோன்றாத வாது இரண்டையும் இனிதாகக் கொள்ளும் மனமாண்பு விபவாவதாரத்தில் இருந்தது போலவே அர்ச்சாவதாரத் திலும் இருக்கின்றபடியை இவற்றால் காட்டப்பட்ட தாகின்றது என்பதை அறிந்து மகிழலாம். வாட்டமின்றி மகிழ்ந்துறை : நித்தியசூரிகளின் சபை நடுவே மிகப் பிரகாசமாய் எழுத்தருளியிருக்கும் இருப்பைத் தவிர்ந்து மானிட நாற்றம் நாறும் இந்த இருள் தருமா வுலகில் - சம்சாரத்தில் - வந்து காணமும் வானரமும் வேடும் ஆனவற்றிற்கு முகங்கொடுத்துக் கொண்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதே என்று திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல், இருட்டறையில் விளக்குப் போலே நம்முடைய கல்யாண குணங்களெல்லாம் நன்கு விளங்கு மாறு இங்கு வரப்பெற்றோமே என்று அளவற்ற மகிழ்ச்சி யுடன் எழுந்தருளியிருக்கின்றபடியை உணர்த்துகின்றது. இராமகிருஷ்ணாதி அவதாரங்கள் ஒரு கால த் தி ற் குரியவையாய் பின்னானார் வணங்கும் சோதியாகாமல் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளினாப் போலல்லாமல் நித்திய வாசம் செய்தருளுகின்ற இடங்களாக அமைந்தன அர்ச்சாவதாரத் திருப்பதிகள். எம்பெருமானை அடிபணிந்து பேறுபெற வேண்டிய வர்கள் சேதநர்கள். இவர்கள் எம்பெருமான் எழுந்தருளி யிருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு செல்ல வேண்டிய வர்கள். இங்கனமிருக்க, இவர்களிடத்தை நோக்கி அவ்வெம்பெருமான் புறப்பட்டு வரும்படியான சந்தர்ப்பம் ஏற்படும் என்ற ஐயம் பிறக்கக்கூடும். அந்த ஐயத்திற்குப் பரிகாரமாக வாமனன்' என்கின்றாள். தன் உடைமை யைப் பெறுகைக்குத் தான் இரப்பாளனாய் அவதரித்தபடி வல்லவா வாமனாவதாரம்? இதனால் சேதநலாபம் தசுவரனுக்குப் புருஷார்த்தமேயன்றி ஈசுவரலாபம் சேத