பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 39 கர்ப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே (1) என்பது இத்திருமொழியின் முதற்பாசுரம். இவ் வநுபவம் பாவனையில் நடைபெற்றதாகக் கொள்ள வேண்டும். அஃறிணைப் பொருள்களுடன் பேசுவதற்கு தொல்காப்பிய விதி இடம் தருகின்றது என்பது மேலே காட்டியதை ஈண்டு நினைவு கூர்க. இந்த இரண்டு திருமொழிகளும் வைணவர் களின் திருமண வைபவத்தில் இன்றும் ஒதப் பெற்று வருகின்றன. சங்கு மறுமொழி தரவில்லை. ஆண்டாளுக்கு ஆற்றாமை மீதுார்ந்து நிற்கின்றது. காலமோ கார்காலம். பண்டு எம்பெருமான் தன்னை விட்டுப் பிரிந்தபோது கார் காலத் தொடக்கத்தில் வருவதாகச் சொல்லிக் சென்றது நினைவிற்கு வருகின்றது. மேகவண்ணனும் மேகங்களுடன் வந்திருக்கக்கூடும் என்று நினைக்கின்றாள். மேகங்களே, எம்பெருமானும் வந்தானோ? என்று கேட்கின்றாள். அவை மறுமாற்றம் சொல்லவில்லை; எம்பெருமானும் தென்படவில்லை. தன் நிலையை அவனிடம் சென்று உரைக்குமாறு இரக்கின்றாள். எட்டாம் திருமொழி வேங்கட வாணனின் மேகவிடுதுரதாக அமைகின்றது. துரதில்: நான்கு செய்திகளைச் சொல்லியனுப்புகின்றாள் கோதைப் பிராட்டி. முதல்செய்தி : என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் பொன்னாகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே (4)