பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

ஆழ்வார்களின் ஆரா அமுது

ஆகம் . மார்பு; தாம் - எம்பெருமான்; புல்குதல் . அணைதல்; புரிவுடைமை - ஆசையுடைமை;

என்பது பிராட்டியின் திருவாக்கு. ஒரு பொருளின்மீது விருப்பமுள்ள சிறார்களைப் பெற்றோர் எவ்வளவு சமாதானப் படுத்தினாலும் அவர்கள் சமாதானம் அடைவ தில்லை. விரும்பின பொருளைப் பெறும் வரையிலும் விடாத பிடிவாதம் கொள்வதுபோல் என் இளங்கொங்கை களும் அவ்வெம்பெருமானுடன் அணைய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கின்றன என்கின்றாள். சொற் கேளாத ப்ரஜைகளைப் (பிள்ளைகள்) போலேயாய்த்து முலைகளின்படி என்பது வியாக்கியான வாக்கியம். இரண்டாவது செய்தி : தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமீனே (5) என்பது. அவனுடைய மன ஈடுபாட்டை அ றி ந் து கோண்டு தன் நிலையைத் தெரிவிக்குமாறு வேண்டுகை என்ற குறிப்பும் புலனாகின்றது. "அவன் தரிலும் தரு கின்றான், தவிரிலும் தவிர்கின்றான்; நீங்கள் அறிவித்துப் போருங்கள்' என்பது வியாக்கியான வாக்கியம். இஃது அதுபவித்து மகிழத்தக்கது. மூன்றாவது செய்தி : உலங்குண்ட விலங்கனிபோல் உள்மெலியப் புகுந்தென்னை கலங்கொண்ட நாரணற்கு என் கடலைநோய் செப்புமினே (6) (உலங்கு - பெரும் கொசுக்கள்; நடலை . நிற்பது, இருப்பது, விழுவது, எழுவதாய்ப் படுகிற நோய்! என்பது பிராட்டியின் திருவாக்கு. உலங்கு என்கின்ற பெருங் கொசுக்கள் விளாம்பழத்தில் மொய்த்தால் அதன்