பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 呜笼 ஆளுஞ் செய்வேன்' - என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒன்று நூறாயிரமாகக் கொடுத்தலாவது - தான் சமர்ப்பித்த தடாக்களில் ஒரு தடாவை அமுது செய்தால் அதற்குக் கைம்மாறாகப் பின்னும் நூறாயிரம் (இலட்சம்) தடா சமர்ப்பித்தல். இப்படியே கணக்கிட்டுப் பார்த்து அவளது பாரிப்பை அறிந்து கொள்ளலாம். ஒரு திருமொழியில் (திருமொழி - 12) தான் அவன் இருக்கும் இடத்தை நோக்கிப் போகப் பார்த்தும் தான் சக்தியற்றவளாய் இருக்கையாலே தன்னிடத்தில் பரிவுள்ள வர்களை நோக்கி அக்கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் இடத்தில் கொண்டுபோய் விடுமாறு வேண்டுகின்றாள். ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வோர் உத்தேச்ய பூமியைக் குறிப்பிடுகின்றாள். மதுரை, ஆய்ப்பாடி, நந்தன் திருமாளிகை, யமுனைக்கரை, காளியன் இருந்த பொய்கைக் கரை, பத்தவிலோசனம்', பாண்டீரம் என்னும் ஆல மரம், கோவர்த்தனம், துவரை - என்ற இடங்களைக் குறிப்பிட்டு மகிழ்கின்றாள். இவளிடம் பரிவுள்ளவர்களும் கால் நடையில் போக முடியாதபடி தளர்ந்திருந்தனர். 'என்னை அவன் பக்கல் கொண்டு செல்ல இயலாவிடினும் அவனிடமிருந்து ஏதாவது ஒரு பிரசாதத்தைக் கொண்டு வந்து அவ்வழியாலே என்னை வாழ்விக்கப் பாருங்கள்' - என்று கூறுவது 13 ஆம் திருமொழி. பிரசாதம் என்பது அருளுக்கிடமான திருத் 28. பக்தவிலோசனம் : பக்தம். அன்னம், சோறு; விலோசனம்.பார்வை. சோறு பார்த்திருக்கும் இடம். யமுனைக் கரையில் இருடிகள் ஆங்கிரஸ்' என்னும் வேள்வியை அநுட்டித்த இடம். 29. பாண்டிவனம்: பாண்டீரவடம் என்ற வடசொல் திரிந்து பாண்டிவனம் என்றாயிற்று. யமுனையாற்றின் அருகில் பெரிய ஆலமரம் ஒன்று உள்ள இடம். பலராமன் பிலம்பன் என்ற அசுரனைக் கொன்ற இடம்,