பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్యీ ஆழ்வார்களின் ஆரா ஆடுதிது; இந்தப் பேற்றினை நேராகப் பேசாமல் கண்ணபிரானைக் கண்டதுண்டோ? என்று கேட்பாரும், 'ஓம், நன்றாகக் கண்டதுண்டு' என்று விடையளிப்பாருமாக வெளிப்படைப். பொருள் கூறும் முறையில் நடைபெறுகின்றது இத் திருமொழி. இவர்தம் பாடல்களில் கொச்சகக்கவி, அறுர்ே ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம் ஆகிய யாப்பு வகைகள் பயின்று வந்துள்ளன. தமிழ் கூறு நல்லுலகில் ஒரு பகுதியான பாக்காலா தமிழ்ப் பெருமக்களுக்கும் தமிழ்ச் சங்கத்தாரும் தமிழை மறவாமல் போற்றி வருவதற்கும், இத்தகைய பேச்சுகள் அமைக்க இடம் தந்து வருவதற்கும் என் சார்பாகவும் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது. திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே உயரங்கர்க் கே.கண்ணி யுகந்தளித்தாள் வாழியே மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே89 என்று இச்சீமாட்டியை வாழ்த்துகின்றது வைணவ உலகம், இத்துடன் என் பேச்சினையும் தலைக்கட்டுகின்றேன். வணக்கம். ... - 30. அப்புள்ளை; வாழித் திருநாமம் 12.