பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர்குல விளக்கு 55 காவாததும் ஒன்றுதான், சினம் பலிக்குமிடத்தில் காத்துக் கொள்பவனே சினம் காப்பவன் ஆகின்றான். இஃது அருளுடையவன் செயல். செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்லிடத்துக் காக்கின் என்? காவாக்கால் 6ੁੰ? * என்பது பொய்யாமொழி. இங்கு அருளுடைய லோகசாரங்க முனிவர் செல்லிடத்துச் சினம் கொள்ளுகின்றார். இதனால் அவருடைய மதிப்பு ஒருபடி கீழிறங்கிவிடுகின்றது. நமக்கும் அம்மாமுனிவர் மேல் வெறுப்புத் தோன்றுகின்றது. நெஞ்சிலே வெகுளியான நினைவை அகற்றினால்தான் தப்பித் தவறியும் சினம் பிறக்காமல் காத்துக் கொள்ள முடியும் என்பதை அநுபவத்தால்தான் அறிய முடியும்.

  • செவியில் ஏறவில்லையோ? அல்லது காது செவிடோ? என்ன அசட்டுத்தனம் அந்த ஈனச் சாதிக்காரனுக்கு?" என்று அருவருப்புக் காட்டினார்க்ள் முனிவருடன் வந்த வர்கள். அவர்களில் சிலர் இங்குச் சண்டாளன் நிற்பது நீதியோ? வைதிகர்கள் தீர்த்தமாடும் இவ்விடத்திற்கு நீ வருவது முறையா? உன்குலத்திற்கும் இத்தலத்திற்கும் வெகுதுரமாயிற்றே! புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல், தொண்டர் வேடம் தாங்கிக் கொண்டிருக்கின்றாயோ?” என்று வாயில் வந்தபடி வசை மாரி பொழிந்தார்கள். இஃதெல்லாம் ஆஷாடபூதி" நிலையிலுள்ள வைதிகர்களின் பேச்சு. இவர்கள் இசைமாரி பொழியும் பாகவதோத்தமர்கள் மேல் வசைமாரி பொழிந்த அற்பர்கள். இவர்களில் ஒருவன் சற்று முரடன். இவன், அடா, அவனுக்குத்தான் என்ன செருக்கு? என்ன பிடிவாதம்? இவனைத் |gశ్రీశ్రీళ్ల పోgఎత్తి ! என்று விரவாதம் செய்து கொண்டே ஒரு கல்லை எடுத்துப்

8. குறள்,301 (வெகுளாமை)