பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

ஆழ்வார்களின் ஆரா அமுது


பாணர்மேல் வீசினான். பாணர் திடுக்கிட்டு விழித்து *பொறுத்தருள வேண்டும் என்று சொல்லிக் கொண்டே பின்வாங்கிக் கடுநடையாகப் போய்விட்டார். கல் விழுந்த பாணரது உடம்பிலும் உள்ளத்திலும் சிறிதளவு கூட வருத்தம் காணப்படவில்லை. ஆனால் பாணர்மேல் கல் விழுந்ததைக் கண்ட லோகசாரங்க மாமுனிவரின் உள்ளம் திடுக்கிட்டது. அவர் குற்றமற்ற குணசீலர்; நாரதர் போன்ற காணயோகி போலும்! என்று எண்ணினார். பிறகு இந்த நிகழ்ச்சியை மறந்து விட முயன்றார். திருக்கோயிலுக்குச் சென்று பெருமாளைச் சேவித்ததும் அருளின் கோலமாய் எல்லாவற்றையும் உணர்ந்து கொண்டே உறங்குவான்போல் அறிதுயிலில் ஆழ்ந்து கிடக்கின்றானே! என்று தமக்குள் தாமே சொல்லிக் கொண்டே வீடு திரும்பினார். வழக்கம்போல் நியம நிட்டைகளில் மனம் ஈடுபடவில்லை. மாமுனிவரின் கனவு: மாலையில் செய்ய வேண்டிய நியம நிட்டைகளை முடித்துக் கொண்டார்; இரவு உணவு கொண்டார். பின்னர் உறங்கத் தொடங்கினார்; சரியான உறக்கம் இல்லை. கனவுதான் வந்தது. அரங்கத்தில் உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமான் மாமுனிவரின் வீடு தேடி வந்து விட்டான். இதோ (களவில்) இவர் கண்முன்தான் இருக்கின்றான்! என்ன உற்பாதமோ? யார் இழைத்த தீங்கோ? நெற்றியில் குருதி ஒழுகும் நிலையில் உள்ளம் கலங்கியவனாகக் காணப்படு கின்றான்! தம்முடைய திருமேனியை இங்ங்னம் நோகச் செய்தது நீதியோ?" என்று சொல்லாமல் சொல்லி வினவு கின்றான். லோகசாரங்கமுனிவரும், சர்வ சக்தியுள்ள பெரிய பெருமாளை இப்படிச் செய்தவர் யார்? என்ன துணிவு அவருக்கு? ஐயோ! எப்படிக் காயம் ஏற்பட்டது? அறிதுயில் கொள்ளும் அரங்கநகர் அப்பனான உன்னையும் இப்படிப் பாடுபடுத்த எவருக்குத்தான் மனம் வந்தது?"